Last Updated:
கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு கிடைப்பதில்லை என மாரியப்பன் தங்கவேல் வேதனை தெரிவித்தார்.
கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு கிடைப்பதில்லை என பாராலிம்பிக் தடகள வீரர் மாரியப்பன் தங்கவேல் வேதனை தெரிவித்துள்ளார்.
சேலம் அரியானூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் பாராலிம்பிக் தடகள வீரர் மாரியப்பன் தங்கவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இதில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களையும், கோப்பைகளையும் வழங்கி கௌரவித்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பன், “கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு கிடைப்பதில்லை” எனத் தெரிவித்தார். மேலும் “கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் சர்வதேச போட்டிகளில் விளையாடினாலும், மற்ற விளையாட்டு போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு கிடைப்பதில்லை” என வேதனையில் உள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் தற்போது விளையாட்டுத் துறைக்கு தமிழ்நாடு அரசு உலகத்தரத்திலான உதவிகளைச் செய்து வருவதாகவும், தான் விளையாடத் தொடங்கிய காலத்தில் இதுபோன்ற உதவிகள் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, இந்தியாவில் நடைபெறும் வேர்ல்டு பாரா அத்லெடிக் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று, தங்கம் வெல்லும் நோக்கத்தோடு பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் மாரியப்பன் கூறினார்.
March 22, 2025 11:26 AM IST


