• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கிரிக்கெட் வீரரின் நகயை அடகு வைத்த நடிகை கைது (காணொளி)

GenevaTimes by GenevaTimes
March 31, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கிரிக்கெட் வீரரின் நகயை அடகு வைத்த நடிகை கைது (காணொளி)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



உரிமையாளரின் அனுமதியின்றி தங்கச் சங்கிலியை அடகு வைத்த சம்பவம் தொடர்பாக, இளம் நடிகையான ஹர்ஷி ரசங்கா தலங்கம பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (30) கைது செய்யப்பட்டு, கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.


பிரபல கிரிக்கெட் வீரர் பானுக்க ராஜபக்சவிடமிருந்து 9 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய தங்கச் சங்கிலியை, அவருக்கு தெரியாமல் பத்தரமுல்லை பகுதியிலுள்ள ‘எல்.பி ஃபைனான்ஸ்’ (LB Finance) கிளையில் அடகு வைத்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


இவ்வாறு மாலையை அடகு வைத்து 6 இலட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டமை தொடர்பாக, பானுக்க ராஜபக்ச செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை (30)  எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் அந்த சங்கிலியை அடகு வைத்ததை ஏற்றுக்கொண்டார். மேலும், அதனை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்


விடயங்களை ஆராய்ந்த பதில் நீதவான், சந்தேகநபரான ஹர்ஷி ரசங்காவை தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார். அத்துடன், குறித்த தங்க சங்கிலியை தலங்கம பொலிஸார் பொறுப்பேற்று, அடுத்த வழக்கு  தவணையின் போது நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறும் நீதவான் இதன்போது கட்டளையிட்டார்.


அத்துடன் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள காணொளியொன்றில், குறித்த தங்கச் சங்கிலி தனக்கு பானுக்க ராஜபக்சவினால் பரிசாக வழங்கப்பட்டது என்று ஹர்ஷி ரசங்கா உரிமை கோரியுள்ளார். மேலும், இந்த சம்பவத்தின் மூலம் தனக்கு ஏற்பட்ட அவமதிப்புக்கு எதிராக தான் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.


பொலிஸ் அறிக்கைகளின்படி, பானுக்க ராஜபக்சவுக்கும் ஹர்ஷிக்கும் இடையில் நிலவிய முந்தைய காதல் உறவின் போது, குறித்த தங்கச் சங்கிலி  அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.


அவர்களது பிரிவின் பின்னர், கிரிக்கெட் வீரர் தனது தங்கச் சங்கிலியை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். அப்போது, அந்த தங்கச் சங்கிலி அடகு வைக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்த நடிகை, அதன் அடகு ரசீதையும் அவரிடம் வழங்கியுள்ளார். அந்த தங்கச் சங்கிலியை அடகு வைத்து சுமார் 6 இலட்சம் ரூபாய் வரை அவர் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.


இதனைத் தொடர்ந்து, அந்த அடகு ரசீதை ஆதாரமாக கொண்டு தலங்கம பொலிஸ் நிலையத்தில் பானுக்க ராஜபக்ச முறைப்பாடு செய்ததையடுத்து நடிகை ஹர்ஷி ரசங்கா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ‘நம்பிக்கை துரோகம்’ மற்றும் ‘நேர்மையற்ற முறையில் சொத்தை முறைகேடு செய்தல்’ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இவ்வழக்கு மீண்டும் ஏப்ரல் 22-ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினம் குறித்த தங்க மாலை மற்றும் பதக்கத்தை ஹர்ஷியிடமிருந்து பெற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு தலங்கம பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


தற்போது பதில் பொறுப்பதிகாரி (OIC) பிரதான பொலிஸ் பரிசோதகர் சுதத் மாலவீரவின் வழிகாட்டலில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


 




Read More

Previous Post

சபாவில் குடும்பத் தகராறு: தம்பியைச் சுட்டுக்கொன்ற அண்ணன்! போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அண்ணன் பலி! | Makkal Osai

Next Post

பிங்க் நிற யானை.. போட்டோ ஷூட் எடுத்த இளம்பெண்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
பிங்க் நிற யானை.. போட்டோ ஷூட் எடுத்த இளம்பெண்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..! | India News (இந்தியா செய்திகள்)

பிங்க் நிற யானை.. போட்டோ ஷூட் எடுத்த இளம்பெண்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin