• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டிய பும்ரா..!

GenevaTimes by GenevaTimes
December 29, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டிய பும்ரா..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:December 29, 2024 1:53 PM IST

ஆஸ்திரேலியாவுடனான இந்த தொடரில் மட்டும் ஜஸ்பிரீத் பும்ரா இதுவரை 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பும்ரா

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பையின் 4-ஆவது போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் 474 ரன்களை எடுத்து ஆஸ்திரேலியா அணி வலுவான நிலையில் இருந்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தடுமாறினாலும், நிதீஷ் குமார் சதத்தால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியாவுடனான இந்த தொடரில் மட்டும் ஜஸ்பிரித் பும்ரா இதுவரை 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த நிலையில், வெறும் 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, சராசரியாக 20 ரன்களுக்குள் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.

இதையும் படிக்க: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சதம்..! நிதீஷ் குமார் முறியடித்த சாதனைகள்

பும்ரா தற்போது 19.38 என்ற சராசரியுடன் 202 விக்கெட்டுகளை கைப்பற்றி, குறைந்த சராசரியுடன் 200 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து மேற்கிந்திய தீவுகளின் ஜாம்பவான்களான மால்கம் மார்ஷல் (20.94 சராசரியில் 376 விக்கெட்டுகள்), ஜோயல் கார்னர் (20.97 சராசரியில் 259 விக்கெட்டுகள்) மற்றும் கர்ட்லி ஆம்ப்ரோஸ் (20.99 சராசரியில் 405 விக்கெட்டுகள்) ஆகியோர் உள்ளனர்.

டிராவிஸ் ஹெட்டை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் பும்ரா தனது 200வது விக்கெட்டை பதிவு செய்தார். அதே ஓவரில் மிட்செல் மார்ஷையும் அவர் வெளியேற்றினார். மேலும், ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்ஸின் போது அலெக்ஸ் கேரியின் விக்கெட்டையும் பும்ரா கைப்பற்றினார்.

இந்த சாதனையின் மூலம், கபில் தேவின் சாதனையை பும்ரா முறியடித்துள்ளார். கபில் தேவ் 50 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், பும்ரா வெறும் 44 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்திய அளவில், ரவிச்சந்திரன் அஸ்வின் 37 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் பும்ரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 14 போட்டிகளில் 74 விக்கெட்டுகளை கைப்பற்றி, ஒரே தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற அஸ்வினின் சாதனையை (71 விக்கெட்டுகள்) பும்ரா முறியடித்துள்ளார். தற்போது, ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் மட்டுமே (2021-23 தொடரில் 88 விக்கெட்டுகள்) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பும்ராவை விட அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

First Published :

December 29, 2024 1:53 PM IST

Read More

Previous Post

மகா கும்பமேளாவில் 5 லட்சம் பேருக்கு இலவச கண் சிகிச்சை: 240 பிரபல மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் | Free eye treatment for 5 lakh people at Maha Kumbh Mela

Next Post

மலையாள சினிமாவுக்கு இந்த ஆண்டு ரூ.700 கோடி இழப்பு – வெளியான அதிர்ச்சி தகவல் | Makkal Osai

Next Post
மலையாள சினிமாவுக்கு இந்த ஆண்டு ரூ.700 கோடி இழப்பு – வெளியான அதிர்ச்சி தகவல் | Makkal Osai

மலையாள சினிமாவுக்கு இந்த ஆண்டு ரூ.700 கோடி இழப்பு - வெளியான அதிர்ச்சி தகவல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin