Last Updated:
இந்த விரும்பத்தகாத ஈடுபட்ட இருவர் மீதும் ஐசிசியின் உடைய நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட் போட்டியின் போது சர்வதேச வீரர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் விளையாடும் சர்வதேச அணிகள் தங்களது அடுத்த கட்ட வீரர்களுக்குப் பயிற்சி கொடுக்கும் வகையில் எமர்ஜிங் மேட்ச் எனப்படும் வளர்ந்து வரும் வீரர்களுக்கான போட்டிகளை நடத்தி வருகிறது. இதன் மூலமாக அவர்கள் சர்வதேசப் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
அந்த வகையில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச நாடுகளின் எமர்ஜிங் அணிகள் பங்கேற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைபெற்றது. டாக்காவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் வங்கதேச அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, 22 வயதான பேட்ஸ்மேன் ரிப்பன் மோண்டோலுக்கும் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஷெபோ நடுலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
Things got out of control between Tshepo Ntuli and Ripon Mondol during the SA Emerging vs Bangladesh Emerging match today and the umpires were forced to intervene pic.twitter.com/EhYC6KVj4u
— Werner (@Werries_) May 28, 2025
முதலில் வாக்குவாதத்தில் ஆரம்பித்த இந்த மோதல் பின்னர் கைகலப்பு வரை சென்றது. அவர்களை நடுவர் கடுமையாகப் போராடி சமாதானப்படுத்தினார்.
ஷெபோ நடுலி வீசிய பந்தை ரிப்பன் சிக்ஸருக்கு அடித்துள்ளார். அதன் பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே இருந்துள்ளார்கள். அதுதான் இருவருக்கும் மோதல் ஏற்படக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த விரும்பத்தகாத ஈடுபட்ட இருவர் மீதும் ஐசிசியின் உடைய நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


