Last Updated:
சென்னையில் வளர்ந்த போது தெருக்களில் கிரிக்கெட் விளையாடிய அனுபவங்களை இந்த கமென்ட்ரியின்போது பகிர்ந்து கொண்டார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 போட்டியை கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை நேரில் கண்டு ரசித்தார். மேலும் அவர் மைக் பிடித்து கிரிக்கெட் ஜாம்பவான் ரவி சாஸ்திரியுடன் இணைந்து கிரிக்கெட் கமென்ட்ரி செய்தார்.
இந்த நிகழ்வுகள் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. டெல்லியில் நடைபெற்ற ‘இந்தியா AI இம்பாக்ட் சமிட் 2026’ என்ற மாநாட்டில் கலந்து கொண்டார். பிப்ரவரி 16 முதல் 20 வரை நடைபெற்ற இந்த மாநாடு, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை (AI) இந்தியாவின் வளர்ச்சிக்கு எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து அமைந்தது.
இந்த மாநாட்டில் பங்கேற்ற பின்னர் இந்தியாவில் நடைபெறும் மற்ற சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான கிரிக்கெ போட்டியை சுந்தர் பிச்சை கண்டு ரசித்தார்.
மேட்ச்சின் போது முன்னணி வர்ணனையாளர் சுந்தர் பிச்சையுடன் இணைந்து அவர் கிரிக்கெட் கமென்ட்ரி செய்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.
சுந்தர் பிச்சை தான் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகன் என்பதையும், சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடி குறிப்பாக, சென்னையில் வளர்ந்த போது தெருக்களில் கிரிக்கெட் விளையாடிய அனுபவங்களை இந்த கமென்ட்ரியின்போது பகிர்ந்து கொண்டார்.
மேலும் கிரிக்கெட் விளையாட்டில் தொழில்நுட்பம் எவ்வாறு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது குறித்தும், கூகுள் நிறுவனம் கிரிக்கெட் ரசிகர்களுக்குத் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் முன்னெடுக்கும் முயற்சிகள் பற்றியும் சுந்தர் பிச்சை விவாதித்தார்.
இருப்பினும் நேற்றைய போட்டியில் இந்திய அணி துரதிருஷ்டவசமாக தோல்வியை தழுவியது.


