Last Updated:
ஏற்கனவே பல்வேறு தோல்விகளால் அந்த அணி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், உள்ளூரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது.
கிரிக்கெட் என்றால் என்னவென்று தெரியாதவர்கள் தான் தேர்வு குழுவில் இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி கடுமையாக விமர்சித்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் நாடு நடத்தி முடித்துள்ளது.
இதில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி தான் விளையாடிய அனைத்து போட்டிகளையும் துபாயில் எதிர்கொண்டது. ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணி இந்த தொடரில் எந்த ஒரு போட்டியிலும் வெற்றி பெறவில்லை. தான் இடம்பெற்ற ஏ பிரிவில் பாகிஸ்தான் கடைசி இடமான நான்காவது இடத்துக்கு சென்றது.
ஏற்கனவே பல்வேறு தோல்விகளால் அந்த அணி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், உள்ளூரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. இதனால் ரசிகர்கள் முதல் முன்னாள் வீரர்கள் வரை பாகிஸ்தான் அணியையும் கிரிக்கெட் வாரியத்தையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மேட்சை விடவும் இந்த விமர்சனங்கள் நல்ல என்டர்டெயின்மெண்டாக இருந்து வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சாகித் அஃபிரிடி, பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது,
”பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் என்னிடம் கிரிக்கெட் பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்று கூறினார். கிரிக்கெட்டை பற்றி தெரியாமல் இருப்பது தவறு கிடையாது. அதனை தெரிந்த வல்லுநர்களின் ஆலோசனைகளை கேட்டு நடக்க வேண்டும். ஆனால் பாகிஸ்தான் தேர்வு குழு உறுப்பினர்கள், தலைவர்கள் முதல் வாரியத் தலைவர்கள் வரை யாருக்குமே கிரிக்கெட்டை பற்றி எதுவுமே தெரியாது.
அப்படி இருக்கும்போது அவர்கள் தங்களது பொறுப்பில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது புரியவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகள் தகுதியானவர்களாக இருந்தால்தான் அணியை நல்ல நிலைமைக்கு கொண்டுவர முடியும்,” என்று கூறினார். அவரது இந்த கருத்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
March 11, 2025 9:30 PM IST