Last Updated:
2026 ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானை ரூ. 9.20 கோடிக்கு வாங்கியிருந்தது
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்ட விவகாரத்தில், ஐபிஎல் தொடரை முழுவதுமாக புறக்கணிப்பதாக வங்கதேசம் அறிவித்துள்ளது.
2026 ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானை ரூ. 9.20 கோடிக்கு வாங்கியிருந்தது. இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி இருக்கிறார்.
இதற்கிடையே வங்கதேசத்தில் இந்துக்களுக்கு ஏற்பத்தப்பட்ட பிரச்னைகள் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே கொதிப்பான சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பிசிசிஐ) அறிவுறுத்தலின் பேரில் கேகேஆர் அணி அவரை விடுவித்தது.
இந்நிலையில் பிசிசிஐ நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐபிஎல் தொடர்பான அனைத்து ஒளிபரப்புகள் மற்றும் விளம்பரங்களை உடனடியாக நிறுத்த வங்கதேச நாட்டின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிகம் விவாதித்து வருகிறார்கள்.
இந்தச் சர்ச்சை விளையாட்டுத் துறையில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அடுத்த மாதம் இந்தியாவில் நடக்கவிருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடத் தங்கள் அணி இந்தியா வராது என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) அறிவித்துள்ளது.


