Last Updated:
பெண்களுக்கான கிரிக்கெட்டின் முன்னோடியான ரேச்சல் ஹேஹோ ஃப்ளின்ட் (Rachael Heyhoe Flint) இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை ஏற்பாடு செய்தார்.
கிரிக்கெட்டின் முதல் உலகக் கோப்பைப் போட்டி ஆண்களின் உலகக் கோப்பைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்காக நடத்தப்பட்டது. தற்போது உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆண்கள் அணிக்கு 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் மகளிருக்கு 1973 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்தப் போட்டிக்குத் தேவையான நிதியுதவியை தொழிலதிபரான ஜாக் ஹெய்வர்ட் (Jack Hayward) வழங்கினார்.
பெண்களுக்கான கிரிக்கெட்டின் முன்னோடியான ரேச்சல் ஹேஹோ ஃப்ளின்ட் (Rachael Heyhoe Flint) இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை ஏற்பாடு செய்தார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற இந்த உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜமைக்கா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, யங் இங்கிலாந்து, மற்றும் இன்டர்நேஷனல் XI (International XI – உலகின் சிறந்த வீரர்களைக் கொண்ட ஒரு கலவையான அணி) ஆகிய 7 அணிகள் மோதின.
இந்தத் தொடர் ‘ரவுண்ட் ராபின்’ (Round-robin) வடிவில் நடைபெற்றது. அதாவது, ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு முறை மோதியது. இங்கிலாந்து அணியை, இந்தத் தொடரை ஏற்பாடு செய்தவரான ரேச்சல் ஹேஹோ ஃப்ளின்ட் தலைமை தாங்கி வழிநடத்தினார்.
இங்கிலாந்து தனது ஆறு போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. இதன் மூலம், கிரிக்கெட் வரலாற்றில் முதல் உலகக் கோப்பை சாம்பியனாக இங்கிலாந்து முடிசூடியது.
October 06, 2025 7:32 PM IST


