• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

“கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேனா..?” – ஓபனாக சொன்ன விராட் கோலி – ஓபனாக சொன்ன விராட் கோலி

GenevaTimes by GenevaTimes
March 16, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
“கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேனா..?” – ஓபனாக சொன்ன விராட் கோலி – ஓபனாக சொன்ன விராட் கோலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 16, 2025 6:44 AM IST

தற்போது வெளியான வீடியோவில், விரைவில் தான் ஓய்வு பெறுவதாக வரும் கருத்துக்களுக்கு விராட் கோலி பதிலளித்துள்ளார்.

விராட் கோலிவிராட் கோலி
விராட் கோலி

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து எந்த அறிவிப்பையும் தாம் வெளியிடவில்லை என்று பிரபல நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வென்று மகுடம் சூடியது. இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய விராட் கோலி, ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த சூழலில், கிரிக்கெட் போட்டிகளை சிறப்பாக விளையாட முடிவது மகிழ்ச்சியளிப்பதாகவும் விராட் கோலி தெரிவித்தார்.

ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக ஆர்சிபி அணியுடன் விராட் கோலி இணைந்தார். அப்போது விராட் கோலி உடனான வீடியோவை ஆர்சிபி அணி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், விரைவில் தான் ஓய்வு பெறுவதாக வரும் கருத்துக்களுக்கு அவர் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், தனக்கு இப்போது ஓய்வு பெறும் எண்ணம் இல்லை. தற்போது வரை அனைத்தும் நல்லவிதமாக சென்றுகொண்டிருப்பதாக தெரிவித்தார்.

மேலும் தனக்குள் இருக்கும் போராட்ட குணம் ஓய்வு பெறும் முடிவுகளுக்கு பதில் கொடுப்பதில்லை என்றும், இதுகுறித்து ராகுல் டிராவிடிடம் ஒருமுறை கேட்டபோது, உன்னுடன் (விராட் கோலி) நீயே எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் என கூறியதாக தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், 25 வயதுகளில் நீங்கள் செய்ததை 35 வயதில் உங்களில் செய்ய முடியாது என்றும், நீண்ட நாட்களுக்கு கிரிக்கெட் விளையாடியவர்களுக்கு இது தெரியும் என்று கூறினார். தற்போது உள்ள இளம் வீரர்கள் இந்த நிலைக்கு வரும்போது அவர்களுக்கு புரியும் என கூறிய அவர், தற்போது அமைதியாகவும், நிம்மதியாகவும் உணர்வதாக தெரிவித்தார்.

இதையும் படிக்க: கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா மாற்றம்? – இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிசிசிஐ திட்டம் என்ன?

இந்த ஆண்டிற்கான முதல் ஐபிஎல் போட்டி மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் ரஜத் பட்டிதர் தலைமையிலான ஆர்சிபி அணி, ரகானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

First Published :

March 16, 2025 6:44 AM IST

Read More

Previous Post

“இது மொழி வெறுப்பல்ல, தாய்மொழி பாதுகாப்பு…” – பவன் கல்யாணுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி | Don’t impose your Hindi language on us: Prakash Raj slams Pawan Kalyan

Next Post

ஓடிடி ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட Officer படக்குழு | Makkal Osai

Next Post
ஓடிடி ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட Officer படக்குழு | Makkal Osai

ஓடிடி ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட Officer படக்குழு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin