Last Updated:
சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் தனியார் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் பங்கேற்றார்.
தற்போதைய சூழ்நிலையில், கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் சாய் கிஷோர் தெரிவித்துள்ளார்.
சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் தனியார் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் பங்கேற்றார். விளையாட்டு விழாவைத் தொடங்கி வைத்து மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிய அவர், மாணவர்களுடன் கிரிக்கெட் பயிற்சியும் மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடராஜனைப் போல் ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் உருவாவதற்கான சிறந்த இடமாக சேலம் விளங்குவதாகக் குறிப்பிட்டார். நடைபெற்று வரும் இருபது ஓவர் உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்ற வேண்டும் என சாய் கிஷோர் விருப்பம் தெரிவித்தார்.
மேலும் பேசிய சாய் கிஷோர், இப்போது ஆல் ரவுண்டர்களுக்கே வாய்ப்பு அதிகம் இருக்கிறது எனவும், ஒரு அணி என்றால் அதற்கு பேட்டிங், பௌலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறந்த வீரர்களே தேவைப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார். போட்டியின் நிலைமையை பொறுத்து எந்த ரோலுக்கு எந்த வீரர் தேவை என்பதை பொறுத்து அணிகள் பயன்படுத்துகின்றன எனவும் சாய் கிஷோர் கூறினார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


