[ad_1]
கிரான்ஜி MRT ரயில் நிலையத்திற்கு அருகில் பெண்ணிடம் தகாத முறையில் நண்டத்துக்கொண்டதாக சந்தேகிக்கப்படும் 35 வயதுமிக்க வெளிநாட்டு ஊழியர் கைது செய்யப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
தூங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரின் முன் அங்கத்தை அவர் தொட்டதாகவும், பின்னர் கழிப்பறையில் ஒளிந்த அவர் பிடிபடாமல் இருக்க தனது உடையை மாற்றியதாகவும் கூறப்படுகிறது.
சட்டவிரோத வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இனி கடும் நடவடிக்கை – பிரத்யேக புகார் செய்யும் வசதி
என்ன நடந்தது?
கடந்த செப்.7 ஆம் தேதி இரவு 11 மணியளவில், ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த வழிப்போக்கர் ஒருவர் இது தொடர்பான தகவல்களை ஷின் மின் டெய்லி நியூஸிடம் பகிர்ந்துகொண்டார்.
அங்கு பெண் ஒருவர் யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்ததைக் கண்டதாக அந்த வழிப்போக்கர் தெரிவித்தார்.
“ஆரம்பத்தில், அந்த பெண் தரைவிரிப்பில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார், அப்போது மது போதையில் இருந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவர் பெண்ணின் மார்பைத் தடவியதாகக் நான் கேள்விப்பட்டேன்” என்றார் வழிப்போக்கர்.
“இதன் காரணமாக குற்றம் செய்த நபரை அந்த பெண் தேடிக்கொண்டிருந்தார்,” என்று வழிப்போக்கர் நினைவு கூர்ந்தார்.
அதன் பின்னர் அந்தப் பெண் ரயில் நிலைய ஊழியர்களிடம் உதவி வேண்டி சென்றார்.
கழிப்பறைக்குள் ஒளிந்த ஊழியர்
குற்றவாளி கழிப்பறைக்குள் நுழைவதைக் கண்டதாக பெண் கூறியதால், நிலைய ஊழியர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் ஆகியோர் ரயில் நிலையத்தின் கழிப்பறைக்கு வெளியே காத்திருந்தனர்.
15 நிமிடங்களுக்குப் பிறகு, அந்த ஆடவர் கழிப்பறையை விட்டு வெளியே வந்ததாகவும், அவர் வெள்ளை நிற டி-சர்ட் அணிந்திருந்தார் என்றும் வழிப்போக்கர் கூறினார்.

சுமார் 30 TO 40 வயதுக்கு இடைப்பட்ட அவரை, சம்பவத்திற்கு முன்பு சிவப்பு நிற டி-சர்ட் மற்றும் தலையில் தொப்பி அணிந்திருந்த நிலையில் கண்டதாக வழிப்போக்கர் சுட்டிக்காட்டினார்.
அந்த ஆடவர் அந்தப் பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்தார் எண்டுறம் அவர் மேலும் கூறினார்.
அதன் பின்னர் அந்த சந்தேக நபரை, நிலைய ஊழியர்கள் பயணிகள் சேவை மையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
தப்பியோட முயற்சி
“நிலைய ஊழியர்கள் காவல்துறையை அழைக்கப்போவதாக சொன்னதும், அந்த நபர் தப்பி ஓட முயன்றார். ஊழியர்களும் அந்த பெண்ணும் அவரை துரத்திச் சென்று பிடித்தனர்” என்று வழிப்போக்கர் ஷின் மினிடம் கூறினார்.
சிறிது நேரத்தில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும், ஆனால் நள்ளிரவு 1 அல்லது 2 மணிக்கு தான் அங்கிருந்து சென்றதாகவும் அவர் சொன்னார்.
கைது
பின்னர், செப்டம்பர் 7 ஆம் தேதி இரவு 11:30 மணிக்கு உட்லேண்ட்ஸ் சாலையில் மானபங்க சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் காவல் படை (SPF) பகிர்ந்து கொண்டது.
காவல்துறை அதிகாரிகள் அங்கு வந்தபோது, கிரான்ஜி MRT நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட 35 வயதுடைய ஆடவர் ஒருவரைக் கண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட 38 வயதுடைய பெண், ரயில் நிலையத்திற்கு அருகில் பாலியல் சீண்டலுக்கு ஆளானதை அடுத்து, ரயில் நிலைய ஊழியர்களின் உதவியை நாடியதாகத் தெரியவந்தது.
மானபங்கம் செய்த குற்றத்திற்காக அந்த ஆடவர் மீது செப்.9 ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த ஆடவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி விதிக்கப்படலாம்.
சிங்கப்பூரில் நான்கு வெளிநாட்டு ஊழியர்கள் கைது: 644 ஊழியர்களிடம் சோதனை
“சம்பளம் முறையா வரல” – கட்டுமானத் துறை வெளிநாட்டு ஊழியர்களிடம் அதிகரித்த புகார்
The post கிரான்ஜி MRT நிலையத்தில் பெண்ணை சீண்டிய வெளிநாட்டு ஊழியர்… மடக்கிய போலீஸ் appeared first on Tamil Daily Singapore.