கிரான்ஜி இண்டஸ்ட்ரியல் கட்டிடத்தில் 5 கார்கள் மீது பேருந்து மோதிய விபத்தில் 65 வயதான பேருந்து ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த விபத்து நேற்று மே 23 அன்று கிராஞ்சியில் அமைந்துள்ள கேரோஸ் நிலையத்தில் (Carros Centre) உள்ள நான்காம் தளத்தில் நடந்தது.
சிங்கப்பூர் வேலையிடத்தில் லாரி மோதி வெளிநாட்டு ஊழியர் பரிதாப மரணம்
அன்று மதியம் 12:30 மணியளவில், 60 ஜாலான் லாம் ஹுவாட்டில் பேருந்து மற்றும் ஐந்து கார்கள் தொடர்புடைய இந்த விபத்து குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதில் கிட்டத்தட்ட 65 வயதுமிக்க பேருந்து ஓட்டுநர் ஒருவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான டேஷ்கேம் காணொளி காட்சிகள் பேஸ்புக்கில் தீயாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த காணொளியில், எதிர் திசையில் அதிவேகமாக வந்த வெள்ளை நிற பேருந்து, வெளியே வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த கார்களின் மீது கடுமையாக மோதி விபத்துக்குள்ளாவதை காணமுடிந்தது.
இதில் அந்த பேருந்தின் முன்பகுதி மோசமாக சேதமடைந்திருப்பதையும் காண முடிகிறது.
தகவலறிந்து வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) துணை மருத்துவர்கள் சம்பவ இடத்தில் உதவிக்காக வேண்டி இருந்தனர்.
வரிசையாக நிற்கவைக்கப்பட்டிருந்த அந்த கார்கள், வடிக்கையாளர்களால் முன்பதிவு செய்யப்பட்ட கார்களாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் மட்டுமே காயமடைந்த ஒரே நபர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
65 வயதான பேருந்து ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர் விசாரணைகளுக்கும் உதவி வருகிறார்.
இந்நிலையில், இது குறித்த போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சிங்கப்பூரில் புளாக்கில் இருந்து கீழே விழுந்த இந்திய ஊழியர் பரிதாப மரணம் – மன அழுத்தம் காரணமா?

