கோத்தா கினபாலு:
கினாபடங்கான், நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சபா மாநிலத்தின் லாமாக் சட்டமன்றத் தொகுதி ஆகிய இரண்டிற்கும் இடைத்தேர்தல் தேதியைத் தேர்தல் ஆணையம் (EC) இன்று அறிவித்துள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினரான டத்தோ புங் மொக்தார் ராடின் (lung and kidney complications காரணமாக டிசம்பர் 5ஆம் தேதி காலமானார்) அவர்களின் மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள இந்த இடங்களை நிரப்பவே இந்த இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
இன்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோஸ்ரீ ராம்லான் டத்தோ ஹாரூன் பின்வரும் தேதிகளை அறிவித்தார்: அதில் வேட்புமனுத் தாக்கல் நாள் ஜனவரி 10, 2026, முன்கூட்டியே வாக்களிப்பு- ஜனவரி 20, 2026, வாக்களிப்பு நாள்ஜனவரி 24, 2026 என்றும், 14 நாட்கள் பிரச்சார காலம் என்றும் அவர் கூறினார்.
டிசம்பர் 5, 2025 நிலவரப்படி புதுப்பிக்கப்பட்ட சமீபத்திய வாக்காளர் பட்டியலில், மொத்தம் 48,722 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 48,526 சாதாரண வாக்காளர்கள் மற்றும் 196 காவல்துறை அதிகாரிகள் அடங்குவர்.
இந்த இரு இடைத்தேர்தல்களுக்கும் சுமார் RM10 மில்லியன் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், இதற்காக 1,106 தேர்தல் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர என்றும் அவர் தெரிவித்தார்.
The post கினாபடங்கான், லாமாக் இடைத்தேர்தல்: ஜனவரி 24 அன்று வாக்களிப்பு நாள்! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

