மெலகாவில் 21 வயதுடைய ராணுவ வீரர் ஜூன் 24-ஆம் தேதி முதல் 41 நாட்களாக காணவில்லை என புகார் அளிக்கபட்டது.
அவர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி இரவு 7 மணி அளவில் செமாபோக்கில் உள்ள உணவகத்தில் பத்திரமாக மீட்கப்பட்டதாக melaka tengah OCPD உதவி ஆணையர் கிறிஸ்டோபர் பாடிட் கூறினார்.
ராணுவ வீரரின் தந்தை செய்தியாளர்களிடம் கூறுகையில் காணாமல் போனவர் தனது மூன்று குழந்தைகளில் நடுத்தர குழந்தை என்றார். அவரை அழைத்து செல்ல வந்த மூத்த சகோதரனைக் கண்டதும் அழத் தொடங்கியதாக கூறினார்.
மேலும் அவர் மகனுக்கு தனிப்பட்ட பிரச்சினை எதுவும் இல்லை என்று கூறினார்.
அவர் கொடுமை படுத்தபடவில்லை என்றும் கூறினார்.