நீலகிரி மாவட்டம் விவசாயத்தில் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக விளங்கி வருகிறது. இங்கு தேயிலை அடுத்தபடியாக அதிக அளவில் மலை காய்கறிகள் விவசாயம் செய்யப்படுகிறது. கேரட், பீட்ரூட், பீன்ஸ், முட்டைக்கோஸ், வெள்ளைப் பூண்டு ஆகியவை இங்கு அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது.
ஊட்டியைச் சுற்றியுள்ள எம் பாலாடா, கேத்தி பாலாடா, தொரையட்டி, எப்பநாடு ஆகிய பகுதிகளில் வெள்ளைப் பூண்டு அதிக அளவில் பயிரிடப்படுகிறது. மலைப்பயிர்கள் சாகுபடியில் அதிக அளவில் முதலீடு மற்றும் பராமரிப்பு என அதிக கவனம் செலுத்தும் ஒரு பயிராக வெள்ளைப் பூண்டு உள்ளது. இதன் விதை விலையும் அதிகமாக உள்ளதால் பராமரிப்பு செலவும் அதிகமானதாகத் தான் உள்ளது.
தற்போது நீலகிரியில் நிலவும் அதிக மழை மற்றும் காற்றினால் வெள்ளைப் பூண்டு செடிகள் காற்றில் சாய்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் இதுவரையிலும் வெள்ளைப் பூண்டு கிலோவிற்கு 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இந்த வாரம் 500 ரூபாயைத் தாண்டி உள்ளது. இதனால் வெள்ளைப் பூண்டு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: எல்ஐசியின் ஹவுசிங் பைனான்சில் 200 காலியிடங்கள்… டிகிரி முடிச்சிருந்தா போதும்…
அதிக காற்றினால் வெள்ளைப்பூண்டு செடிகள் சேதம் அடைகிறது. மேலும் அதிக மழையினால் அழுகல் ஏற்படுவதால் எதிர்பார்த்த அளவிற்கு விளைச்சல் இல்லை. நல்ல விலை கிடைக்கும் பட்சத்தில் அதிகமான விளைச்சல் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து எம் பாலாடா பகுதியைச் சேர்ந்த விவசாயி ரவி கூறுகையில், “கேரட், உருளைக்கிழங்கு, பூண்டு விவசாயம் செய்கிறோம். அதிக மழையினால் செடிகள் சாய்ந்தது இதனால் பூண்டு விவசாயத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சீசனில் பயிரிடும்போது நல்ல விளைச்சல் இருக்கும் இந்த முறை அதிக மழையினால் நல்ல விலைக்கு விற்றும் விளைச்சல் குறைந்ததால் கட்டுப்படி ஆவதற்கு சற்று சிரமமாக இருக்கிறது.
அதிக அளவில் ஆள் கூலி வழங்கப்படும் ஒரு விவசாயமாக வெள்ளைப் பூண்டு உள்ளது. ஒரு கூடை வெள்ளைப் பூண்டை அறுப்பதற்கு 150 வரையிலும் கூலி கொடுக்கப்படுகிறது. நல்ல விலை விற்பதினால் மகிழ்ச்சியாக உள்ளது. மழையின் பாதிப்பு இல்லாமல் இருந்திருந்தால் நல்ல லாபம் கிடைத்திருக்கும்” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)