சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம், காஸாவில் பாதிக்கப்பட்ட சுமார் 6,500 பேருக்கான கூடாரங்களை அனுப்பியுள்ளது.
அனுப்பப்பட்ட கூடாரங்கள், கரம் அபு சேலம் கிராசிங் வழியாக காஸா சென்றடைந்ததாக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் (SRC) நேற்று (அக்டோபர் 7) அறிக்கையில் தெரிவித்தது.
செஞ்சிலுவைச் சங்க சர்வதேச குழு போன்ற செஞ்சிலுவைச் சங்க செம்பிறை இயக்கத்தில் உள்ள அதன் பிற கூட்டாளி அமைப்புகள் மூலம் கூடுதலாக $500,000 நிவாரண பணிகளுக்காக வழங்கியதாக SRC தெரிவித்துள்ளது.
இதன் மூலம் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் காஸாவுக்கு அளித்த மனிதாபிமான நிவாரண பங்களிப்பு மொத்தம் $1.9 மில்லியனாக எட்டியுள்ளது.
மருத்துவப் பொருட்கள், சுகாதாரப் பெட்டிகள், உணவுப் பொருட்கள், நீர் வடிகட்டு அமைப்புகள் போன்றவை அமைக்க இந்த மனிதாபிமான நிதிகள் பயன்படுகின்றன.
மேலும், காஸா பகுதியில் உள்ள செஞ்சிலுவைச் சங்க திறந்த மருத்துவமனையின் செயல்பாட்டிற்கும் அது பயன்படுகிறது.
கூடுதலாக, நடமாடும் கல்வி வாகனத்துக்கும் செஞ்சிலுவைச் சங்கம் ஆதரவு கரம் நீட்டுகிறது. எகிப்தில் உள்ள பாலஸ்தீன குழந்தைகளுக்காக வேன் ஒன்று வகுப்பறையாக உருமாற்றப்பட்டு பயன்படுகிறது.
மேலும் அங்கு வசிக்கும் பாலஸ்தீன குடும்பங்களுக்கும் தேவையான அடிப்படை உதவிகளை செய்வதாகவும் SRC தெரிவித்துள்ளது.
மது போதையில் சிராங்கூன் சாலையில் படுத்துக்கிடந்த ஆடவர் கைது
PHOTO: SRC