• Login
Saturday, April 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்க மத்தியஸ்தம் – ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு பாக். வரவேற்பு | Pakistan welcomes Trump’s offer to mediate Kashmir issue

GenevaTimes by GenevaTimes
May 11, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்க மத்தியஸ்தம் – ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு பாக். வரவேற்பு | Pakistan welcomes Trump’s offer to mediate Kashmir issue
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இஸ்லாமாபாத்: இந்தியா பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய முன்வந்திருப்பதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்துள்ள பாகிஸ்தான் அரசு, ஆபரேஷன் சிந்தூருக்கு பின்பு இந்தியாவுடன் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதில் அமெரிக்கா ஆற்றிய பங்கினை வரவேற்றுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா பாகிஸ்தான் உறவு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அறிக்கையை பாகிஸ்தான் வரவேற்கிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஆதரிப்பதில் அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகள் ஆற்றிய முக்கியமான பங்களிப்பை பாகிஸ்தான் பாராட்டுகிறது. இது பிராந்திய ஸ்திரத்தன்மையை பேணுவதற்கான ஒரு படியாகும்.

தெற்காசியாவிலும் அதற்கு அப்பாலும் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் நீண்ட கால பிரச்சினையான காஷ்மீர் சிக்கலைத் தீர்ப்பதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்வந்திருப்பதற்கு எங்களின் பாராட்டுகள். ஜம்மு காஷ்மீர் பிரச்சினைக்கான எந்த ஒரு நியாயமான மற்றும் நீண்டகால தீர்வும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தின் படி இருக்க வேண்டும். மேலும், ஜம்மு காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைகள் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை உறுதி செய்வதாக இருக்க வேண்டும் என்பதை பாகிஸ்தான் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் வளத்தினைப் பேணுவதற்கான முயற்சிகளில் அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளுடன் ஈடுபடுவதற்கு பாகிஸ்தான் உறுதிபூண்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாதாக ட்ரூத் சமூக ஊடகத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த வரலாற்று சிறப்பான மற்றும் வீரதீரமிக்க முடிவினை எடுப்பதில் அமெரிக்கா உங்களுக்கு உதவ முடிந்ததில் நான் பெருமையடைகிறேன். இன்னும் விவாதிக்கப்படாவிட்டாலும், இரண்டு பெரிய நாடுகளுடனும் கணிசமான அளவில் வணிகத்தை அதிகரிக்கப்போகிறேன்.

கூடுதலாக ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் பிரச்சினையில் ஒரு தீர்வினை எட்ட முடியுமா என்பதனைப் பார்க்க உங்கள் இருவருடனும் இணைந்து பணியாற்றுவேன். சிறப்பாக செயல்பட்டமைக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைமைக்கு கடவுள் அருள் புரியட்டும்” என்று தெரிவித்திருந்திருந்தார்.



Read More

Previous Post

உள்ளாடை தொழிலில் சாதனை… குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, வெற்றிபெற்ற சிங்கப்பெண்…!

Next Post

நண்பரோ, பகைவரோ, நெருப்புடன் விளையாடாதீர்கள் – ஜாஹிட்  எச்சரிக்கை

Next Post
நண்பரோ, பகைவரோ, நெருப்புடன் விளையாடாதீர்கள் – ஜாஹிட்  எச்சரிக்கை

நண்பரோ, பகைவரோ, நெருப்புடன் விளையாடாதீர்கள் – ஜாஹிட்  எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin