Last Updated:
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் விபத்தில் மூன்று வீரர்கள் உயிரிழந்தனர். ரம்பன் மாவட்டத்தில் 700 அடி ஆழ பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்ததில் அமித் குமார், சுஜீத் குமார், மன் பஹதூர் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று வீரர்கள் உயிரிழந்தனர்.
ஜம்முவில் இருந்து ஸ்ரீநர் நோக்கி காலை பதினொன்று முப்பது மணி அளவில் சென்று கொண்டு இருந்த ராணுவ வாகனம் ரம்பன் மாவட்டம் பேட்டரி சஸ்மா அருகே விபத்துக்குள்ளானது. ராணுவ வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி 700 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தை தொடர்ந்து ராணுவம் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை, உள்ளூர் தன்னார்வலர்கள் உதவியுடன் நடைபெற்ற கூட்டு மீட்புப் பணியில் 3 ராணுவ வீர்ரகள் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். உயிரிழந்த வீரர்கள் அமித் குமார், சுஜீத் குமார், மன் பஹதூர் என அடையாளம் காணப்பட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Jammu and Kashmir
காஷ்மீரில் ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழப்பு… 700 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்த விபத்தில் சோகம்!


