Last Updated:
கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், ஆனைகட்டி சாலையில் உள்ள மாதேஸ்வரன் சிவன் கோயிலில் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், ஆனைகட்டி சாலையில் உள்ள மாதேஸ்வரன் சிவன் கோயிலில் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர், கோவையில் இருந்து சென்னைக்கு வரும் போது விமானத்தில் ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு தந்தனர். சென்னை வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்த போது, காஷ்மீரில் அமைதி திரும்பியது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை என்று கூறினார். குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை வழங்க வேண்டும் என்றும் ரஜினிகாந்த் வலியுறுத்தினார்.
ஜெயிலர் 2 இறுதி படப்பிடிப்பை நிறைவு செய்து வீடு திரும்ப விமானத்தில் ஏறிய ரஜினிகாந்தை ரசிகர்கள் கை தட்டலுடன் உற்சாகத்தோடு வரவேற்றனர். பின் அவர் ரசிகர்களின் அன்பை ஏற்று கை கூப்பி நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
April 26, 2025 7:01 AM IST
”காஷ்மீரில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” – நடிகர் ரஜினிகாந்த் காட்டம்..!


