தமிழ்நாடு – சிங்கப்பூர் இடையே ஒரு வலுவான காதல் கதை எப்போவுமே உள்ளது. அதிலும் குறிப்பாக காவிரி டெல்டா பகுதி மக்களுக்கும் சிங்கப்பூருக்கு இடையே இருக்கும் பிணைப்பு மிக ஆழமானது.
குறிப்பிட்டு சொன்னால் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மதுக்கூர், முத்துப்பேட்டை, மன்னார்குடி, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் சிங்கப்பூர் தந்தை அமரர் லீ குவான் யூ அவர்களை தலையில் வைத்து கொண்டாடுவார்கள்.
சிங்கப்பூருக்கு நன்றிக்கடன்
தங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றி, பொருளாதார இன்னல்களை போக்கிய சிங்கப்பூருக்கு தமிழ் மக்கள் எப்போதும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்பார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
இதற்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் அப்பகுதி மக்கள் பெரும்பாலான தங்கள் தொழில்களுக்கு சிங்கப்பூரை அடையாளமாக பயன்படுத்துவர்.
சிங்கப்பூரை பிரதிபலிக்கும் நிறுவனங்கள்
குறிப்பாக சலூன், சிங்கப்பூர் பிளாசாக்கள், டீ கடைகள், ஹோட்டல்கள் என பல நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் அடையாளங்களை மற்றும் பெயர்களை அவர்கள் பயன்படுத்துவர்.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூர் அதிக அளவில் அடையாளப்படுத்தப்படும்.

இன்னும் கூடுதலாக சொல்லவேண்டும் என்றால், திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி 5 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதுவே டெல்டா மக்களின் பேரன்பை பறைசாற்றும்.
விமான பயணிகளிடையே திருச்சி-சிங்கப்பூர் வான்வழியில் இந்த 5 விமானம் கூட போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழும்பி வருகிறது.
புதிய செந்தோசா உணவகம்
சிங்கப்பூர் பெயர்ப்பலகை வரிசையில் தற்போது ஒன்று புதிதாக இணைந்துள்ளது, அதன் பெயர் “செந்தோசா ரெஸ்டாரண்ட்” (Sentosa Restaurant).
இது கல்லணையில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

ஏன் இந்த பெயர் காரணம் என்ற கேள்விக்கு பதிலளித்த கடை உரிமையாளர் செபாஸ்டியன், “என்னை வாழவைத்த சிங்கப்பூருக்கு சிறிய நன்றிக்கடன் இது” என்று கூறினார்.
மேலும் அந்த கடையின் உள்கட்டமைப்பு முழுக்க சிங்கப்பூரின் அடையாளங்களைப் பிரதிபலிக்கும் வகையிலும், நினைவுக்கூறும் வண்ணமும் அவர் வடிவமைத்துள்ளார்.
ஒர்க் பெர்மிட் (Work Permit) அனுமதியில் வேலை பார்ப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 2025 ஜூலை 1 முதல் நடப்பு
Photos: Tiruchirapalli International Airport – TRZ- Updates

