• Login
Wednesday, May 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்து பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்:வானதி சீனிவாசன் … | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 20, 2026
in மலேசியா
Reading Time: 5 mins read
0
காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்து பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்:வானதி சீனிவாசன் … | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை, தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

புதுக்கோட்டை அருகே வாய் பேச முடியாத பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே, வாய் பேச முடியாத 35 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை, காரில் கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, சாலையில் தள்ளிவிட்டு சென்றுள்ளதாக வரும் செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன.

வாய் பேச முடியாத பெண்ணுக்கு நேர்ந்த இந்த கொடுமை, ஒட்டுமொத்த தமிழ்நாடும் வெட்கி தலைகுனிய வேண்டிய பெரும் அவலமாகும். மன்னிக்கவே முடியாத இந்த பெருங்குற்றத்தில் ஈடுபட்ட மனித மிருகங்களை உடனடியாக கைது செய்து, சட்டத்தின் முன்பு நிறுத்தி மரண தண்டனை வழங்க வேண்டும்.கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடக்காத நாளே இல்லை. அதனால்தான் திமுக அரசைத் தமிழக மக்கள் வீட்டுக்கு அனுப்பினர். இப்போது ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை.

ஆட்சிக்கு வந்த உடனேயே பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார். தமிழகத்தில் சில நாட்களாக நடக்கும் பாலியல் வன்கொடுமை, கொலை சம்பவங்களை பார்க்கும் போது இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போன்றவை, வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்கிறது என்பது தெளிவாகிறது. தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்பதற்காகத்தான், தமிழக வெற்றி கழகத்திற்கு மக்கள் வாக்களித்தனர்.

ஆனால், ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு, மாற்றத்திற்கான அரசு அல்ல, திமுக அரசின் தொடர்ச்சி என்பதை கடந்த சில நாட்களாக நடக்கும் சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன. டாஸ்மாக் மது கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவது ஜோசப் விஜய் ஆட்சியிலும் தொடர்கிறது.

மணல் உள்ளிட்ட கனிம வளகொள்ளையும் நிற்கவில்லை. காவல்துறையும் வழக்கம்போல ஆளுங்கட்சிக்கு கைகட்டி சேவகம் செய்கிறது.எனவே, காவல்துறையைத் தன் வசம் வைத்திருக்கும் முதல்-அமைச்சர், காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்து பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இல்லையெனில், பெண்களால் ஆட்சிக்கு வந்த ஜோசப் விஜய், பெண்களாலேயே வீழ்த்தப்படுவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Previous articleபுதிய, போலியாக உருவாக்குவது கடினமான மலேசிய கடவுச்சீட்டு ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது; விண்ணப்பங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) புகைப்படங்களைப் பயன்படுத்த வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது
tamiltamil



Read More

Previous Post

கசிந்த விசேட வர்த்தமானி…! வாகன இறக்குமதியில் பாரிய ஊழல் குற்றச்சாட்டு

Next Post

Tamilmirror Online || மீன்பிடியில் ஈடுபட்ட 32 பேர் கைது

Next Post
Tamilmirror Online || மீன்பிடியில் ஈடுபட்ட 32 பேர் கைது

Tamilmirror Online || மீன்பிடியில் ஈடுபட்ட 32 பேர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin