• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

காவலரின் செல்போனில் இருந்து நீதிபதிக்கு கொலை மிரட்டல்! ரூ. 3,700 கோடி வழக்கில் சிக்கியவர் செய்த பகீர் செயல் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 9, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
காவலரின் செல்போனில் இருந்து நீதிபதிக்கு கொலை மிரட்டல்! ரூ. 3,700 கோடி வழக்கில் சிக்கியவர் செய்த பகீர் செயல் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லக்னோ நீதிபதிக்கு காவலர் செல்போனில் இருந்துச் சென்ற கொலை மிரட்டல் மின் அஞ்சலால் நீதிபதி அதிர்ச்சிக்குள்ளானார். இந்த வழக்கில் லக்னோ சிறை காவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ நீதிமன்றத்தின் நீதிபதிக்கு, “உங்களை கொல்லப்போகிறேன்” எனும் மெயில் வந்தது. இதனை பார்த்து அதிர்ந்துபோன அந்த நீதிபதி உடனடியாக சைபர் க்ரைம் காவல்துறையில் இது தொடர்பாக புகார் கொடுத்தார்.

புகாரை பெற்ற சைபர் க்ரைம் காவல்துறையினர், அது தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், லக்னோ சிறையில் இருக்கும் அஜய் குமார் எனும் காவலரின் செல்போனில் இருந்து இந்த கொலை மிரட்டல் மெயில் வந்திருப்பதை கண்டறிந்தனர்.

இதனையடுத்து காவல்துறையினர் காவலர் அஜய் குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் காவல்துறைக்கு அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்துள்ளது. காவல்துறை விசாரணையில், நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்தது சுமார் ரூ. 3,700 கோடி சைபர் மோசடியில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் அனுபவ் மிட்டால் என்பவர் என்பது தெரியவந்தது.

சிறையில் இருப்பவரிடம் எப்படி காவலரின் செல்போன் கிடைத்தது என காவல்துறை அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கடந்த 4ஆம் தேதி வழக்கு விசாரணை தொடர்பாக காவலர் அஜய்குமார், அனுபவ் மிட்டாலை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது அனுபவ், தன் வழக்கு தொடர்பான நிலையை அறிந்துகொள்வதாக கூறி தன்னிடம் போனை வாங்கி புதிதாக ஒரு மெயில் ஐடி-ஐ உருவாக்கி அதன் மூலம், நீதிபதிக்கு இந்த மிரட்டல் செய்தி அனுப்பியுள்ளார் என காவலர் அஜய்குமார் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அனுபவ் மிட்டால் எனும் நபர் சுமார் 7 லட்சம் பேரிடம் ரூ. 3,700 கோடி சைபர் க்ரைம் மோசடியில் ஈடுபட்டிருந்தார். இவர் கைது செய்யப்பட்டு, லக்னோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அனுபவ் மிட்டால் மற்றும் காவலர் அஜய்குமார் ஆகிய இருவர் மீதும் தற்போது காவல்துறையினர் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அனுபவ் மிட்டாலிடம், ஏன் நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்பன உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

காவலரின் செல்போனைக் கொண்டு மோசடி வழக்கில் சிறையில் இருக்கும் நபர், நீதிபதிக்கே கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 09, 2025 6:42 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

காவலரின் செல்போனில் இருந்து நீதிபதிக்கு கொலை மிரட்டல்! ரூ. 3,700 கோடி வழக்கில் சிக்கியவர் செய்த பகீர் செயல்

Read More

Previous Post

சென்னை மெட்ரோவில் கொண்டு செல்லப்பட்ட நுரையீரல்

Next Post

ஐபிஎல் 2026 ஆம் சீசனுக்கான மினி ஏலம்.. எங்கே, எப்போது நடைபெறுகிறது தெரியுமா? | விளையாட்டு

Next Post
ஐபிஎல் 2026 ஆம் சீசனுக்கான மினி ஏலம்.. எங்கே, எப்போது நடைபெறுகிறது தெரியுமா? | விளையாட்டு

ஐபிஎல் 2026 ஆம் சீசனுக்கான மினி ஏலம்.. எங்கே, எப்போது நடைபெறுகிறது தெரியுமா? | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin