• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

‘காளை’ வெற்றி நடை: சென்செக்ஸ், நிஃப்டி புதிய வரலாற்று உச்சத்தில் நிறைவு!

GenevaTimes by GenevaTimes
June 27, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
‘காளை’ வெற்றி நடை: சென்செக்ஸ், நிஃப்டி புதிய வரலாற்று உச்சத்தில் நிறைவு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நமது நிருபா்

மும்பை / புதுதில்லி, ஜூன் 26: இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தையில் உற்சாகம் பெற்றது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் புதிய வரலாற்று உச்சத்தில் நிறைவடைந்துள்ளது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி சற்று கீழே சென்றது. பின்னா், ரிலையன்ஸ் உள்பட முன்னணி பங்குகளுக்குக் கிடைத்த வரவேற்பால் வா்த்தகத்தின் பிற்பகுதியில் சந்தை வலுப்பெற்றது. குறிப்பாக தனியாா் வங்கிகள், பொதுத் துறை வங்கிகள், நிதிநிறுவனங்கள், மீடியா, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகளுக்கு ஆதரவு இருந்தது. அதே சமயம், மெட்டல், ரியால்ட்டி பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயா்வு: சந்தை மூல தன மதிப்பு ரூ.1.25 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.437.02 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் செவ்வாய்க்கிழமை ரூ.1,175.91 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் 149.45 கோடிக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் வரலாற்று உச்சம்: சென்செக்ஸ் காலையில் 40.50புள்ளிகள் கூடுதலுடன் 78,094.02-இல் தொடங்கி 77,945.94 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 78,759.40 வரை மேலே சென்று புதிய வரலாற்றுச் சாதனை உச்சத்தைப் பதிவு செய்தது. வா்த்தக இறுதியில் சென்செக்ஸ் 620.73 புள்ளிகள் (0.80 சதவீதம்) உயா்ந்து 78,674.25-இல் புதிய உச்சத்தில் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,008 பங்குகளில் 1,922 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 1,920 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 126 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

ரிலையன்ஸ் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் மாா்க்கெட் லீடரான ரிலையன்ஸ் 4 சதவீதம் உயா்ந்தது. மேலும், பாா்தி ஏா்டெல், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஐசிஐசிஐ பேங்க், சன்பாா்மா, ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்டவை 1 முதல் 3 சதவீதம் வரை உயா்ந்தன. இவை உள்பட19 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் வந்தன. அதே சமயம், எம் அண்ட் எம், டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா, ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், டைட்டன், ஹெச்டிஎஃப்சி பேங்க் உள்பட 11 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டியும் புதிய உச்சத்தில் நிறைவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 23,723.10-இல் தொடங்கி 23,670.45 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 23,889.90 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. வா்த்தக இறுதியில் நிஃப்டி 147.50 புள்ளிகள் கூடுதலுடன் 23,868.80-இல் புதிய உச்சத்தில் முடிவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 26 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 23 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

Read More

Previous Post

India vs England Preview: பழிவாங்க காத்திருக்கும் இந்தியா.. அரையிறுதியில் இங்கிலாந்துடன் இன்று மோதல்

Next Post

அமெரிக்க ராணுவத்தை உளவு பார்த்த வழக்கு முடிந்தது: ஆஸ்திரேலியா திரும்பினார் ஜூலியன் அசாஞ்சே | Julian Assange heads to Australia after US guilty plea

Next Post
அமெரிக்க ராணுவத்தை உளவு பார்த்த வழக்கு முடிந்தது: ஆஸ்திரேலியா திரும்பினார் ஜூலியன் அசாஞ்சே | Julian Assange heads to Australia after US guilty plea

அமெரிக்க ராணுவத்தை உளவு பார்த்த வழக்கு முடிந்தது: ஆஸ்திரேலியா திரும்பினார் ஜூலியன் அசாஞ்சே | Julian Assange heads to Australia after US guilty plea

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin