Last Updated:
தூத்துக்குடி மாநகராட்சியில் புதிதாகத் திறக்கப்பட்ட இந்த இலவச டர்ஃப் இல் விளையாட இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
விடுமுறை தினங்களில் ஊரில் உள்ள பல வெட்டவெளி மைதானங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடுவதை நாம் பார்த்திருப்போம்.
ஆனால் சென்னை, கோவை போன்ற மாவட்டங்களில் செயற்கை புல்லால் அமைக்கப்பட்ட டர்ஃப் என்ற கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்டத்திற்கான மைதானத்தில் நம்மில் பலரும் கேள்விப்பட்டிருப்போம், அதற்கு கட்டணம் கட்டி விளையாடிக் கொள்ளலாம்.
பெரிய பெரிய நகரங்களில் காணப்படும் டர்ஃப் ஆனது தற்போது தூத்துக்குடி மாவட்டத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் போல் இல்லாமல் இலவசமாக செயல்படுகிறது. தூத்துக்குடி மாநகராட்சி மூலம் அமைக்கப்பட்ட இந்த டர்ஃப் முற்றிலும் இலவசமாக செயல்படுகிறது.
அதுமட்டுமின்றி, இது டென்னிஸ், கைப்பந்து போன்ற விளையாட்டிற்கான மைதானங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இளைஞர்கள் பலரும் இங்கு வந்து ஆர்வமுடன் விளையாடுகின்றனர்.
இந்த டர்ஃப் ஆனது தூத்துக்குடி – பாளையங்கோட்டை சாலையில் வ. வூ. சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில் அமைந்துள்ளது. காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை செயல்படும் இந்த டர்ஃப் QR ஸ்கேனர் மூலமாக செயல்படுகிறது.
விளையாடுவதற்கு முந்தைய நாளே இந்த ஸ்கேனரை உபயோகித்து ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும். முதலில் ரிஜிஸ்டர் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஒரு ஸ்லாட்டுக்கு ஒரு மணி நேரம் வழங்கப்படுகிறது.
Thoothukkudi,Tamil Nadu
June 23, 2025 10:41 AM IST

