Last Updated:
சீன அரசின் இந்த முன்னெடுப்பு அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சீனாவில் மலைப்பகுதிகளில் கால்நடைகளைப் பாதுகாப்பாக மேய்ச்சல் நிலங்களுக்கு அழைத்துச் செல்வதற்காகக் காவல்துறையின் குதிரைப்படை களமிறக்கப்பட்டுள்ளன.
ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பிராந்தியத்தில் உள்ள ஜிம்சார் கவுண்ட்டி மலைப்பகுதியில், கால்நடை இடம்பெயர்வு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்பகுதியில் கால்நடை வளர்ப்பாளர்கள் தங்களது ஆடு, மாடுகளைக் குளிர்கால மேய்ச்சல் பகுதிகளுக்கு மாற்றும் சவாலான பணிகளை மேற்கொண்டுள்ளனர். கரடுமுரடான மலைப்பாதைகளில் விலங்குகள் பாதுகாப்பாகச் செல்வதை உறுதி செய்யும் பொருட்டு, காவல்துறையினரும் குதிரைகளில் பின்தொடர்ந்து சென்று வழிகாட்டுகின்றனர்.
மலைப்பாதைகளைக் கடக்கும் சாலைகளில் வாகனங்களை மெதுவாக இயக்கச் செய்து, கால்நடைகள் பாதுகாப்பாகக் கடந்து செல்ல வழிவகுக்கின்றனர். இடம்பெயர்வுப் பாதைகளில் ஏதேனும் ஆபத்துகள் உள்ளதா என்பதை முன்கூட்டியே ஆராய்ந்து கால்நடை வளர்ப்பாளர்களுக்கு உதவி செய்கின்றனர். இதன்மூலம் கால்நடை வளர்ப்பாளர்கள் எவ்விதத் தடையுமின்றித் தங்களது கால்நடைகளைப் பாதுகாப்பான மேய்ச்சல் நிலங்களுக்கு அழைத்துச் சென்று வருகின்றனர். அரசின் இந்த முன்னெடுப்பு அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


