“தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பெருந்தலைவர் காமராஜர் பொறுப்பேற்றதும் அனைவருக்கும் கல்வி வழங்க பள்ளிகள் இல்லாத கிராமமே இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் தமிழகம் முழுவதும் பள்ளிகளை திறந்தார். பள்ளிகளை திறந்தும் மாணவர்கள் வருகை எதிர்பார்த்தபடி இல்லாதபோது அதற்கான காரணத்தை அறிந்து மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இத்திட்டத்தினால் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது, அனைவருக்கும் இலவச கல்வி கிடைத்தது, கல்வியில் புரட்சி நடைபெற்றது.
தமிழ்நாட்டு மக்கள் எந்த ஆட்சியால் அடிப்படை வசதிகளை பெற்றார்களோ அந்த ஆட்சியை வழங்கிய பெருந்தலைவர் காமராஜரின் பெயருக்கு புகழ் சேர்க்கின்ற வகையில் பெயர் சூட்டியதற்காக தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் நன்றி பெருக்கோடு வரவேற்கிறார்கள், முதல்-அமைச்சரை பாராட்டுகிறார்கள்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் – அமைச்சர் செ.ராஜேஷ் குமார் வரவேற்பு… appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

