ஒரு சிலர் தங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற வகுத்துக்கொண்ட பாதைகள் பலருக்கும் நம்பிக்கையும், உத்வேகமும் அளிக்கக்கூடியதாக இருக்கும். அப்படியொரு அற்புதமான பாதையை தேர்ந்தெடுத்தவர்தான் ஆதித் பலிச்சா. 21 வயதான இவர்தான் ஆன்லைன் வழியாக மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யும் Zepto-வின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.
இந்நிறுவனம் தொடங்கிய வருடங்களிலேயே ஆச்சர்யம் அளிக்கும் வகையில் ரூ.7,400 கோடி அளவுக்கு மதிப்புள்ளதாக வளர்ந்துள்ளது. தன்னுடைய நீண்டகால நண்பர் கைவல்யா வோராவோடு இணைந்து Zepto நிறுவனத்தை தொடங்கிய ஆதித், இந்திய கார்ப்பரேட் வரலாற்றில் மிகப்பெரும் வெற்றிக்கதையை படைத்துள்ளார் என்றால் மிகையல்ல.
2001ம் ஆண்டு மும்பையில் பிறந்த ஆதித், எதிர்காலத்தில் மிகப்பெரிய தொழிலதிபராக மாறப் போகிறார் என்பதை இளம் வயதிலேயே தெரியப்படுத்தினார். அதை பறைசாற்றும் விதமாக தன்னுடைய 17வது வயதில் GoPool என்ற முதல் நிறுவனத்தை தொடங்கினார் ஆதித். அதன்பிறகு அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பிரிவில் சேர்ந்தார். ஆனால் கொரோனா நோய்த் தொற்று காரணமாக அவரது திட்டம் அனைத்தும் செயல்படுத்த முடியாமல் போனது. இதனால் தனது பட்டப்படிப்பை பாதியிலேயே நிறுத்திய ஆதித், தொழில்முனைவோராக வேண்டும் என்ற தனது கனவை நிஜமாக்க முடிவு செய்தார்.
தன்னுடைய நண்பர் கைவால்யாவோடு சேர்ந்து முதலாவதாக KiranaKart என்ற நிறுவனத்தை தொடங்கினார். ஆனால் தொடங்கிய 10 மாதங்களிலேயே சில பிரச்சனைகள் காரணமாக தொழிலில் நஷ்டத்தை சந்தித்தார். முதல் முயற்சியே தோல்வியில் முடிவடைந்தது ஒரு பக்கம் என்றால், அவரது பல முயற்சிகளுக்கும் கொரோனா காலக்கட்டம் தடையாக இருந்தது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் 2021-ம் ஆண்டு Zepto நிறுவனத்தை தொடங்கினார்.
இதையும் படிக்க: திருமணம் செய்தால் ரூ.2.50 லட்சம்… மத்திய அரசின் திட்டம்… இதுதான் நிபந்தனை!
ஆதித்தின் பொறுமைக்கு பலன் கிடைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடைய Zepto நிறுவனம் வளர ஆரம்பித்தது. இதன் விளைவாக பலரும் இவருடைய நிறுவனத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டினர். இதனால் நிறுவனத்தின் மதிப்பும் உயர்ந்தது. இதன் காரணமாக நிறுவனம் தொடங்கிய குறுகிய காலத்திற்குள்ளேயே ஆதித்தும், அவரது நண்பரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்தனர்.
இன்றைய காலத்தில் ஆன்லைன் சேவை வழங்க பல நிறுவனங்கள் இருக்கும் நிலையில், Zepto நிறுவனம் ஆன்லைன் வழியாக மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யும் சேவையை வழங்கி வருகிறது. 2023ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் மதிப்பு ரூ.11,000 கோடி அளவிற்கு உயர்ந்துள்ளது. இன்று இந்தியாவின் பணக்கார நபர்களில் ஒருவராக இருக்கும் ஆதித்தின் சொத்து மதிப்பு எவ்வுளவு தெரியுமா? சுமார் ரூ.1,200 கோடி. இவருடைய நண்பரும் Zepto நிறுவனத்தின் இணை நிறுவனருமான கைவால்யா வோராவின் சொத்து மதிப்பும் ரூ.1,000 கோடியாக உள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
