அலோர்ஸ்டார்:
Kuala Ketil இல் உள்ள ஒரு வீட்டின் கதவின் மேலுள்ள காற்றோட்ட துளையில் சிக்கிக் கொண்டிருந்த ஒரு குட்டி பூனை இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) மீட்கப்பட்டது.
“காலை 10.43 மணியளவில் ஒரு பெண் தனது செல்லப்பிராணியான பூனை துளையில் சிக்கிக் கொண்டுவிட்டதாக அவசர அழைப்பு அளித்தார். தீவிர நடவடிக்கைக்காக நான்கு பேருடைய ஒரு குழுவை உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பினோம்,” என பாலிங் மாவட்ட சிவில் பாதுகாப்புப் படை (APM) அதிகாரி லெப்டினன் (PA) மொஹ்ட் பைசோல் அப்த் அஸிஸ் கூறினார்.
மீட்புக்குழு சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டபோது, பூனைக்குட்டியின் தலை கதவின் மேலுள்ள ஒரு துளையில் நெருக்கமாக சிக்கிக் கொண்டிருந்தது. சாதாரண முறைகளில் அதை விடுவிக்க முடியவில்லை.
விலங்கின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு கருவிகள் மூலம் கதவுப் பாகத்தினை மெதுவாக வெட்டி, முன்னெச்சரிக்கையுடன் மீட்டனர். இதனால் அந்த பூனை சிக்கிய இடத்திலிருந்து எந்தவொரு காயமுமின்றி வெற்றிகரமாக மீட்கப்பட்டது.
“மீட்புக் குழுவின் விரைவு மற்றும் திறமையான நடவடிக்கைக்கு வீட்டின் உரிமையாளர் நன்றியினை தெரிவித்தார்,” என மொஹ்ட் பைசோல் கூறினார்.