Last Updated:
ராகுல் காந்தியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, அதற்கான நேரம் ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார்.
நாட்டில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்து தீர்வு காண மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயார் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
நாடாளுமன்ற பூஜ்ய நேரத்தில் பேசிய ராகுல் காந்தி, நாட்டின் முக்கிய நகரங்களை விஷ காற்று சூழ்ந்துள்ளதாகவும், இதனால் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு நுரையீரல் பாதிப்பு வருவதாகவும், பலருக்கு புற்றுநோய் வருவதாகவும் கூறினார். இது கொள்கை ரீதியான பிரச்சனை அல்ல என்றும் , இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விரிவான மற்றும் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்தப்பட வேண்டும், எனவும் அறிவுறுத்தினார்.
ராகுல் காந்தியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, அதற்கான நேரம் ஒதுக்கப்படும் என்றும், அரசு இது குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.
December 13, 2025 6:52 AM IST


