Last Updated:
டெல்லி இந்தியா கேட் பகுதியில் காற்று மாசுக்கு எதிராக போராட்டம் நடந்தது. 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
காற்று மாசைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி, டெல்லி செங்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 15 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
இந்த நிலையில், காற்று மாசு ஏற்படுவதைத் தடுக்கவும், காற்று மாசைக் கட்டுப்படுத்தவும் வலியுறுத்தி, டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் போராட்டக்குழுவினர் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் சாலையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 15 பேரை காவல்துறையினர் திங்கட்கிழமை கைது செய்தனர். போராட்டத்தின்போது இந்தியா கேட் முன்பு பணியாற்றிய பாதுகாவலர்கள் மீது மிளகுப் பொடி தூவியதாக காவல்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. போராட்டத்தின்போது பல அதிகாரிகள் காயம் அடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தப் போராட்டம் தொடர்பாக பேசிய பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி, “காற்று மாசுக்கு எதிராக போராடுவதாக கூறி சிலர் முகத்தில் முகமூடி அணிந்தபடி வந்தனர். போராட்ட இடத்தை அவர்கள் நெருங்கியதும், அவர்களின் முகமுடிகள் கழற்றப்பட்டு, உண்மை முகம் வெளியானது. போராட்ட இடத்திற்கு வந்தவர்கள், கொல்லப்பட்ட நக்சல் தளபதிக்கு ஆதரவாக அவர்கள் கோஷங்களை எழுப்பத் தொடங்கினர்.
#WATCH | Delhi | BJP MP Sudhanshu Trivedi says, “…Some people reached India Gate with a mask on their faces that they are there to protest against the pollution. The masks were off as soon as they reached there, and the real face was out, and they started raising slogans in… pic.twitter.com/OqwVwks1yf
— ANI (@ANI) November 24, 2025
காங்கிரஸ் முஸ்லிம் லீக் – மாவோயிஸ்டாக மாறிவிட்டது என்று பிரதமர் கூறியுள்ளார். காற்று மாசுபாட்டை விட, மார்க்ஸ் மற்றும் மாவோவின் மாசுபாடு அவர்களின் மூளையில் அடர்த்தியாக உள்ளது. அதனுடன், தீவிரவாத ‘காத்முல்லாக்களின்’ ஆதரவுடன் ஆட்சிக்கு வர வேண்டும் என்று அவர்கள் கனவு காண்கிறார்கள். இது இன்னும் ஆபத்தானது” எனத் தெரிவித்தார்.
November 24, 2025 7:18 PM IST


