கூட்டுறவு வங்கிகளில் முதல்முறையாக, மோட்டார் பைக், கார், அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்க கடன் வழங்குமாறு, வங்கி அதிகாரிகளுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், மற்றும் தொடக்க வேளான் கூட்டுறவு கடன் சங்கங்களில், பயிர் கடன், நகை கடன் என பல பிரிவுகளில் கடன்கள் வழங்கப்படுகின்றன.
கடந்த 2023 – 2024 ஆண்டில் அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து, 82,000 கோடி ரூபாய்க்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் 1.03 லட்சம் கோடி ரூபாய்க்கு கடன் வழங்குமாறு, வங்கிகளின் மேலாண் இயக்குநர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க:
5 வருட ஃபிக்சட் டெபாசிட் vs ரிட்டயர்மென்ட் ஃபண்ட்: எதில் அதிக ரிட்டன்?
அதிக அளவாக 52,562 கோடி ரூபாய்க்கு நகை கடனும், 1600 கோடி ரூபாய்க்கு பயிர் கடனும், சுய உதவி குழுக்களுக்கு 5,505 கோடி ரூபாய் கடனும் வழங்கப்பட உள்ளது. இதனால் முதல் முறையாக கார், மோட்டார் பைக் போன்ற வாகனங்கள் வாங்கவும், அடுக்குமாடி குடியிருப்பு வாங்கவும் கடன்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர ஓய்வூதியதாரர்களுக்கும் வீடு உட்பட அடமானத்தின் பேரில் கடன் வழங்கப்பட உள்ளது. அதன்படி வாகனக்கடன், ஓய்வூதியதாரர் கடன், அடுக்குமாடி குடியிருப்பு கடன் தலா 23 கோடி ரூபாய் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு வாகனக்கடன் வழங்கப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து, மாத ஊதியம் பெறுவோருக்கு வாகனக்கடன் விரிவாக்கம் செய்யப்படவிருக்கிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
