புத்தளம் மாவட்ட உடப்பு கிராமத்தில் வருடா வருடம் நடைபெறும் தமிழ் கார்த்திகை மாத சபரிமலை ஐயப்பசுவாமி மாலை அணியும் பக்தர்களின் நிகழ்வு இன்று (16) காலை இடம்பெற்றது.
கறுப்பு நிற ஆடை அணிந்து ,நாற்பது நாட்கள் சைவ உணவுடன் விரதமிருந்து ,இருமுடி சுமந்து பின்னர் இந்தியாவிலுள்ள சபரிமலை ஐயப்பசுவாமி ஆலயத்திற்குச் சென்று தமது நேர்த்திக்கடனை இவர்கள் நிறைவேற்றுவார்கள்.உடப்பு வம்பிவட்டானில் அமைந்துள்ள ஐயப்பசுவாமி ஆலயம்,உடப்பு குளத்தடி ஐயப்பசுவாமி ஆலயம்,உடப்பு அறுவாய் பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் ஆலய அருகில் ஐயப்பசுவாமி ஆலயம் போன்றவற்றில் இந்த மாலை அணிவிக்கும் நிகழ்வு பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
குருசாமிகள் சின்னையாதாஸ்,பார்த்தசாரதிமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு மாலையை அணிவித்தனர்.இதன் போது,சுமார் 45 பேர் மாலை அணிந்து கொண்டனர்.
உடப்பு குறூப் நிருபர்
The post கார்த்திகை மாத சபரிமலை ஐயப்பசுவாமி மாலை அணியும் நிகழ்வு appeared first on Thinakaran.


