• Login
Thursday, April 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

‘கார்கேவின் வார்த்தைகள் காங்கிரஸின் மனநிலையை வெளிப்படுத்துகின்றன’ – கடுமையாகச் சாடிய பாஜகவின் நிதின் நபின் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 23, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
‘கார்கேவின் வார்த்தைகள் காங்கிரஸின் மனநிலையை வெளிப்படுத்துகின்றன’ – கடுமையாகச் சாடிய பாஜகவின் நிதின் நபின் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 23, 2026 4:38 PM IST

மல்லிகார்ஜுன கார்கேவின் ‘பயங்கரவாதி’ குறித்த கருத்து, காங்கிரஸின் “மனநிலையைப்” பிரதிபலிப்பதாகவும், அது அழுத்தத்தின் காரணமாகவே வெளியிடப்பட்டதாகவும் பாஜக தலைவர் நிதின் நபின் தெரிவித்தார்.

News18
News18

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகள், காங்கிரஸ் கட்சியின் “மனநிலையை” பிரதிபலிப்பதாகவும், அழுத்தத்தின் காரணமாகவே அவை கூறப்பட்டன என்றும் பாஜக தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார்.

நெட்வொர்க்18 குழுமத்தின் நிர்வாக இயக்குநரும், குழுமத் தலைமை ஆசிரியருமான ராகுல் ஜோஷியுடன் நடந்த பிரத்யேக நேர்காணலில் பேசிய நிதின் நபின், காங்கிரஸ் தலைவரின் கார்கேயின் கருத்துகள் தற்செயலானவை அல்ல என்று குறிப்பிட்டார்.

“அவரது வார்த்தைகள் காங்கிரஸின் மனநிலையைக் காட்டுகின்றன. பேசும்படி அழுத்தம் கொடுக்கப்பட்டதையே அவர் பேசியுள்ளார்,” என்று ராகுல் ஜோஷியிடம் பேசிய நபின் கூறினார். கார்கேயின் கருத்துகள் வேண்டுமென்றே கூறப்பட்டவை என்றும், பிரதமருக்கு எதிரான காங்கிரஸின் அரசியல் பிரச்சாரத்தில் உள்ள ஒரு போக்கைக் காட்டுவதாகவும் பாஜக தலைவர் நிதின் நபின் தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பில், அதிமுக-பாஜக கூட்டணியை விமர்சித்தபோது பிரதமர் மோடியை “பயங்கரவாதி” என்று கார்கே குறிப்பிட்டுப் பேசினார். இதனையடுத்து இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியது. பின்னர் “பிரதமர் ஒரு பயங்கரவாதி என்று நான் ஒருபோதும் கூறவில்லை. அவர் மக்களையும் அரசியல் கட்சிகளையும் பயமுறுத்துகிறார்” என்று கூறிய கார்கே, அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறை போன்ற அமைப்புகள் எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைக்கப் பயன்படுத்தப்படுகின்றன என்றும் கூறினார்.

கார்கேவின் கருத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர், தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து, கார்கேவுக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்குமாறும் தெரிவித்துள்ளது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

‘கார்கேவின் வார்த்தைகள் காங்கிரஸின் மனநிலையை வெளிப்படுத்துகின்றன’ – கடுமையாகச் சாடிய பாஜகவின் நிதின் நபின்

Read More

Previous Post

இலங்கையில் மீண்டும் தட்டம்மை நோய் : மரணத்திற்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை

Next Post

புஸ்பாகோம் (Puspakom) அதிகாரியை ‘டிக் டாக்’கில் அவதூறு செய்த வியாபாரி: 80,000 ரிங்கிட் இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு! | Makkal Osai

Next Post
புஸ்பாகோம் (Puspakom) அதிகாரியை ‘டிக் டாக்’கில் அவதூறு செய்த வியாபாரி: 80,000 ரிங்கிட் இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு! | Makkal Osai

புஸ்பாகோம் (Puspakom) அதிகாரியை ‘டிக் டாக்’கில் அவதூறு செய்த வியாபாரி: 80,000 ரிங்கிட் இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin