நிறுவனரான மீனு சுப்பையா பேசுகையில், “செட்டிநாட்டின் வளமான பாரம்பரியத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை நான் உணர்ந்தேன். இந்த பாரம்பரியங்களைப் பாதுகாக்கவும், காப்பகப்படுத்தவும் ‘பெட்டகம்’ ஒரு எளிய முயற்சி” என்று தெரிவித்தார்.மேலும் செட்டிநாட்டு பகுதிகளில் வழக்கத்தில் இருந்த பாரம்பரிய நகைகள் குறித்து இதுவரை யாரும் ஆவணப்படுத்தவே இல்லை. காலப்போக்கில் இந்த பாரம்பரிய நகைகள் குறித்த விவரங்கள் மிகவும் குறைவாக இருந்தது. இதனை பாதுகாக்க வேண்டும், ஆவணப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் காரைக்குடி மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேஷியா உள்ளிட்ட நாடுகளுக்கும் பயணம் செய்து, இது குறித்த தகவல்களை திரட்டி ஆவணப்படுத்தி உள்ளோம். கோயில் அறக்கட்டளைகளின் அனுமதி பெற்று பழங்கால நகைளின் வடிவமைப்பு குறித்த விவரங்களை சேகரித்தோம் என்று தெரிவித்தார். காரைக்குடியில் அமைந்துள்ள ’பெட்டகம்’ அருங்காட்சியகத்தை பார்வையிட விரும்புவோர், concierge@meenusubbiah.luxe என்ற மின் அஞ்சல் அல்லது 95665 03736 என்ற தொலைபேசி எண் முன்பதிவு செய்து வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.