சிங்கப்பூரை விட்டு சட்டவிரோதமாக வெளியேற காருக்குள் ஒளிந்துகொண்டு சென்ற 2 வெளிநாட்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த சனிக்கிழமை (ஜூலை 5) காருக்குள் ஒளிந்துகொண்டு சட்டவிரோதமாக சிங்கப்பூரை விட்டு வெளியேற முயன்றதற்காக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு போலியான சான்றிதழ்: “செக் வைத்த MOM” – 3 ஊழியர்களுக்கு சிறை
மேலும் ICA வெளியிட்ட அறிக்கையில், 20 வயதுமிக்க காரின் ஓட்டுநர் ஒருவரும் இதில் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.
கைதான அதே நாளில் மூன்று பேர் மீதும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலேசியப் பதிவு பெற்ற காரில் இருந்த அவர்களை உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ICA அதிகாரிகள் கைது செய்தனர்.
பயண ஆவணம் இல்லை
கைதான 30 மற்றும் 31 வயதுடைய இருவரிடமும் எந்த பயண ஆவணமும் இல்லை என்றும் ICA தெரிவித்துள்ளது.
கைதான அந்த மூவரும் மலேசியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டனை
சிங்கப்பூரை விட்டு சட்டவிரோதமாக வெளியேறுவதற்கு S$2,000 வரை அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
சட்டவிரோதமாக குடியேறிகளை சிங்கப்பூரிலிருந்து வெளியே கொண்டு செல்லும் வேலையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் குறைந்தபட்சம் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
மேலும் இதுபோன்ற குற்றச் செயல்களில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படலாம் என்று ICA கூறியது.

