The post காரில் போதைப்பொருள், கத்தி!! காவல்துறையைக் கண்டவுடன் ஓட்டம் பிடித்த நபர்!! appeared first on SG Tamilan.
27 ஜூலை, பிற்பகல் 2.05 மணிக்கு புளோக் 177 தோபாயோ செண்ட்ரல் முகவரியில் இருந்து உதவி வேண்டும் என்று காவல்துறைக்கு அழைப்பு வந்ததாக 8 world செய்தித் தளத்திடம் காவல்துறையினர் தெரிவித்தனர். காவல்துறை அதிகாரிகள் தோபாயோ பகுதியில் சந்தேகிக்கப்படும் நபர் காரில் தப்பிக்க முயன்றபோது காவல்துறை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.
காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றவுடன் ஒரு கார் அங்கிருந்து உடனே புறப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த காரை காவல்துறை அதிகாரிகள் பின்தொடர்ந்தனர்.
பிறகு அந்த கார் தோபாயோ லோரோங் 3க்கும் லோரோங் 4க்கும் இடையில் இருக்கும் சாலைச் சந்திப்பில் சறுக்கியதாகக் காவல்துறை தெரிவித்தனர்.
கார் ஓட்டுநர் கதவைத் திறந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.கால்களில் காலணிகளைக் கூட அணியாமல் ஓடினார்.
27 வயதுடைய அந்த நபரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
காரில் அவருடன் இருந்த 25 வயது பயணி டான் டொக செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
காரில் போதைப் பொருளை உட்கொள்ள பயன்படுத்தப்படும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் கத்தி போன்ற சில ஆயுதங்களும் போதைப் பொருளும் காரில் இருப்பது தெரியவந்தது.
போலியான ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பது, ஆயுதங்களை வைத்திருத்தல், போதைப்பொருளை வைத்திருந்தது போன்ற குற்றங்களுக்காக சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.
Follow us on : click here
The post காரில் போதைப்பொருள், கத்தி!! காவல்துறையைக் கண்டவுடன் ஓட்டம் பிடித்த நபர்!! appeared first on SG Tamilan.
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin