Last Updated:
கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் எட்மண் நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 55 வயதான அர்வி சிங் சாகூ என்பவர் ஒரு நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த அக்டோபர் 19-ம் தேதி அர்வி சிங் சாகூவும் அவரது மனைவியும் எட்மண்டனில் உள்ள ஒரு உணவகத்தில் உணவருந்திவிட்டு தங்கள் காருக்குத் திரும்பினர். அப்போது, 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் காரின் மீது சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தார்.
இதைப் பார்த்து அதிர்ந்த அர்வி சிங் சாகூ, அந்த நபரிடம் “என்ன செய்கிறீர்கள்?” என அதட்டும் தொணியில் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர், “இங்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்… அதைக் கேட்க நீ யார்?” எனத் தெனாவட்டாக கேள்வி எழுப்பியிருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில், ஆத்திரம் தலைக்கேறிய சிறுநீர் கழித்த நபர், அருகிலிருந்த கட்டையை எடுத்து அர்வி சிங் சாகூவின் தலையில் அடித்துள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த அர்விசிங் சம்பவ இடத்திலேயே சுண்டு விழுந்தார். அவருடன் வந்த நபர் உடனே போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அடிபட்டு கிடந்த அர்வி சிங் சாகூவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த சில நாட்களாக சிகிச்சையில் இருந்த அர்வி சிங் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையில், தாக்குதல் நடத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில் கைதானவர் 40 வயதான கைல் பாபின் என்பதும் அவருக்கும் அர்வி சிங் சாகூவுக்கும் எந்தவிதமான முன் அறிமுகமும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் கனடாவில் கொல்லப்பட்ட சம்பவம் அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
October 31, 2025 9:16 PM IST
காரின் மீது சிறுநீர் கழித்த நபர்.. தட்டிக்கேட்ட இந்திய வம்சாவளி அடித்துக் கொலை.. கனடாவில் அதிர்ச்சி!


