திண்டுக்கல் காந்தி காய்கறி மார்க்கெட்டில் வரத்துக்குறைவால் கடந்த வாரம் காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில் தற்போது நாட்டுக் காய்களான கத்திரிக்காய், வெண்டைக்காய், மிளகாய் போன்ற காய்கறிகளின் விலை இன்று குறைந்து காணப்படுகின்றன.
கிலோ 40 ரூபாயிலிருந்து 80 ரூபாய் வரை விற்பனையான கத்திரிக்காய் மற்றும் வெண்டைக்காயானது இன்று கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையாகின்றது, கிலோ 130 ரூபாய் வரை விற்பனையான மிளகாய் இன்று 30 ரூபாய்க்கு விற்பனையாகின்றது.
இது குறித்து வியாபாரி பாக்கியராஜ் கூறுகையில், “வரத்து அதிகரித்ததால் கத்திரிக்காய் , வெண்டைக்காய், பீர்க்கங்காய் போன்ற காய்கறிகளின் விலைகள் குறைந்த காணப்படுகின்றன. கிலோ 120 ரூபாய்க்கு விற்பனையான பீர்க்கங்காய் இன்று 80 ரூபாய்க்கு விற்பனையாகின்றது, வெண்டைக்காயானது கிலோ 25 ரூபாய் வரை விற்பனையாகின்றது.
இதையும் படிங்க: மேலவாசல் முருகனை தரிசித்தால் போதும்… அறுபடை வீடுகளிலும் வழிபட்ட பலன் கிட்டும்…
வரத்துக் குறைவால் கடந்த சில நாட்களாகவே தக்காளியின் விலை அதிகமாகத் தான் காணப்படுகிறது. கிலோ 80 ரூபாய் வரை விற்பனையாகின்ற தக்காளி விலையில் எந்த மாற்றமும் காணப்படவில்லை. அதேபோல் முருங்கைக்காயும் கிலோ 200 ரூபாய் வரை விற்பனையாகின்றது. மேலும் பாகற்காய் மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.
பாகற்காய் கிலோ 80 ரூபாய் வரை விற்பனையாகின்றது. கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையான சின்ன வெங்காயம் தற்போது 70 ரூபாய் வரை விற்பனையாகின்றது. வரத்து அதிகரித்தால் காய்கறிகளின் விலை குறைந்து காணப்படும், வரத்துக் குறைவால் தற்போது சில காய்கறிகளின் விலை உயர்ந்தும் காணப்படுகின்றன” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
