Last Updated:
இத்தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் பிப்ரவரியில் தொடங்கவுள்ள இருபது ஓவர் உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது
காயத்தில் இருந்து மீண்ட ஷூப்மன் கில், தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இன்று விளையாடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கவுள்ளது.
இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி டெஸ்ட் தொடரை அபாரமாக வென்ற நிலையில், ஒருநாள் தொடரை இந்தியா வென்று பதிலடி கொடுத்தது.இந்நிலையில் இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்றிரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது.
சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி களமிறங்கவுள்ள நிலையில் காயத்தால் ஓய்வில் இருந்துவந்த ஷுப்மன் கில்லும் இதில் விளையாடவுள்ளார்.
இத்தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் பிப்ரவரியில் தொடங்கவுள்ள இருபது ஓவர் உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதால் இத்தொடர் அதிக கவனம் பெற்றுள்ளது.
அதேபோல வரவிருக்கும் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தேர்வுக்கும் இத்தொடர் கைகொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
December 09, 2025 5:19 PM IST


