Last Updated:
ஸ்னாட்ச் பிரிவில் 85 கிலோ எடையையும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 105 கிலோ எடையையும் தூக்கியதன் மூலம் மொத்தம் 190 கிலோ எடையைக் கடந்து அவர் தங்கப் பதக்கத்தைத் தன்வசமாக்கினார்.
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மீரா பாய் சானு, தொடர்ந்து 3 ஆவது முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
23வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகின்றன. இதில் 74 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 123 பேர் கொண்ட அணி பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று வருகின்றனர்.
இந்நிலையில் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற மீராபாய் சானு இந்தியாவிற்கு தங்கப்பதக்கத்தை பெற்று சாதனை படைத்தார். ஸ்னாட்ச் பிரிவில் 85 கிலோ எடையையும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 105 கிலோ எடையையும் தூக்கியதன் மூலம் மொத்தம் 190 கிலோ எடையைக் கடந்து அவர் தங்கப் பதக்கத்தைத் தன்வசமாக்கினார்.
போட்டிக்குப்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மீராபாய்சானு, நாட்டிற்கு தங்கப்பதக்கம் பெற்றுத்தந்தது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். மீராபாய்சானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஒவ்வொரு இந்தியருக்கும் அவர் முன் உதாரணமாக திகழ்வதாக கூறினார்.
Another glorious chapter in Indian Weightlifting!
The talented Mirabai Chanu once again showcased her skills at the Commonwealth Games with a stunning performance in the 48 kg category and winning Gold. With back-to-back Commonwealth Games Golds and an overall fourth CWG medal… pic.twitter.com/37IOvMXBTI— Narendra Modi (@narendramodi) July 26, 2026
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், இந்திய பளுதூக்குதல் வரலாற்றில் மேலும் ஒரு பொற்கால அத்தியாயம். திறமையான மீராபாய் சானு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் 48 கிலோ எடைப்பிரிவில் அபாரமான திறமையை வெளிப்படுத்தி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
தொடர்ச்சியாக இரண்டு காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றதுடன், மொத்தம் நான்காவது காமன்வெல்த் பதக்கத்தையும் கைப்பற்றியுள்ள அவர், ஒவ்வொரு இந்தியருக்கும் உண்மையான உத்வேகமாக திகழ்கிறார். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். எதிர்காலப் போட்டிகளிலும் மேலும் பல வெற்றிகளைப் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகள்!


