Last Updated:
இந்தப் புதிய காரின் மதிப்பு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் மொத்த பரிசுத் தொகையை விட மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக்கோப்பை டி20 தொடரை இந்திய அணி வென்றதை கொண்டாடும் விதமாக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ரூ. 12 கோடி மதிப்பிலான காரை வாங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி மூன்றாவது முறையாகச் சாம்பியன் பட்டம் வென்றதை ஹர்திக் பாண்டியா தனது ஸ்டைலில் மிக பிரம்மாண்டமாகக் கொண்டாடி வருகிறார்.
இந்த வெற்றிக்காகத் தனக்குத்தானே ஒரு பரிசாக, சுமார் ரூ. 12 கோடி மதிப்பிலான Ferrari 12Cilindri எனும் அதிநவீன சூப்பர் காரை அவர் வாங்கியுள்ளார். சமீபத்தில் மும்பை வீதிகளில் தனது புதிய கருப்பு நிற ஃபெராரி காரில், காதலியும் பிரபல மாடலுமான மஹேகா சர்மாவுடன் அவர் வலம் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
இந்தப் புதிய காரின் மதிப்பு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் மொத்த பரிசுத் தொகையை விட மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்கள் மற்றும் உயர் ரக வாட்ச்களை வாங்குவதில் ஆர்வம் கொண்டவரான ஹர்திக் பாண்ட்யாவிடம் ரூ. 10 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் ஃபாண்டம், லம்போர்கினி உருஸ் மற்றும் மெர்சிடிஸ்-AMG G63 போன்ற பல சொகுசு வாகனங்கள் உள்ளன.
தற்போது இணைந்துள்ள இந்த ஃபெராரி 12Cilindri கார், மணிக்கு 340 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய 6.5 லிட்டர் V12 இன்ஜினைக் கொண்டுள்ளது. இது வெறும் 2.9 வினாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

