Last Updated:
பிகாரில் காதலர் தினத்தை ஒட்டி தனிமையில் சந்தித்துக் கொண்ட காதல் ஜோடிக்கு, ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிகாரில் காதலர் தினத்தை ஒட்டி தனிமையில் சந்தித்துக் கொண்ட காதல் ஜோடிக்கு, ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது காதலியை பார்க்கச் சென்ற இளைஞருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கப்பட்டதில் நடந்தது என்ன?
காதலர் தினத்தன்று தனது காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கச் சென்ற இளைஞருக்கு, ஊரே சேர்ந்து பூ மாலை போட்டது. வசமாக சிக்கிக் கொண்டவர் கத்தினேன்… கதறினேன்… கதையாக எவ்வளவு போராடியும் ஊர் மக்கள் விட்டபாடில்லை… இறுதியாக மாலையை மாற்றிக் கொண்ட பின்னரே கோயிலில் இருந்து வெளியே வந்துள்ளார்…
உலகம் முழுவதும் காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி காதலர்கள் ஒவ்வொருவரும் தங்களது மனம் கவர்ந்தவரை மகிழ்விப்பதற்காக ரோஜா மலர் முதல், தங்க ஆபரணங்கள் உட்பட பல்வேறு பரிசுப் பொருட்களை கொடுத்து அசத்தினர்.
இதில், பிகாரில் உள்ள இளைஞர் ஒருவர் தனது காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க முடிவு செய்துள்ளார். இதற்காக, காலையிலேயே வண்டி பிடித்துக் கொண்டு காதலியின் கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்றதும் கிராமத்தில் உள்ள கோயிலில் இளம்பெண்ணை சந்தித்துள்ளார். யாருக்கும் தெரியாமல் தனிமையில் சந்திக்க சென்றவரை ஊர் மக்கள் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.
அவர்களிடம் மாட்டிக் கொண்ட இளைஞர், தனது காதலியை பார்க்கத்தான் இங்கு வந்தேன் என்று கூறியுள்ளார். அதற்கு, எப்படியும் காதலியை கரம் பிடிக்கத்தானே போகிறாய்… அதை இப்போதே தங்கள் முன்பு மாலை மாற்றிக்கொள் என்று தெரிவித்துள்ளனர். அதற்கு, அந்த இளைஞரோ தனது தந்தைக்கு தெரிந்தால் கொன்று விடுவார் என்று கெஞ்சி கூத்தாடியுள்ளார். அதை காதில் வாங்கிக் கொள்ளாத ஊர் மக்கள், உடனே இளம்பெண்ணை திருமணம் செய்துகொள் என்று மிரட்டியுள்ளனர். அதனால், வேறு வழியின்றி கட்டாய திருமணம் செய்யும் நிலைக்கு காதல் ஜோடி தள்ளப்பட்டுள்ளது.
காதலர் தினத்தை ஒட்டி தனிமையில் சந்தித்துக் கொண்ட காதல் ஜோடிக்கு, ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


