Last Updated:
ஆஷிஷ் – அஞ்சு என்ற தம்பதிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
ராஜஸ்தானில் காதலனை கரம்பிடிப்பதற்காக, மணந்த கணவனை கொலை செய்து விபத்து நாடகம் நடத்திய பெண் உள்பட 4 பேரை காவல் துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஆஷிஷ் – அஞ்சு என்ற தம்பதிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து, திருமணத்தில் விருப்பமில்லாத அஞ்சு தனது காதலன் சஞ்சுவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சஞ்சுவை கரம்பிடிக்க திட்டமிட்ட அஞ்சு தனது கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். அதன்படி சம்பவத்தன்று ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று சஞ்சுவின் நண்பர்கள் மூவருடன் அடித்துக் கொன்று வாகனம் மோதி உயிரிழந்தது போல் நாடகமாடி உள்ளார்.
மேலும் சஞ்சுவின் நண்பர்களிடம் தனது நகை, செல்போன் உள்ளிட்டவற்றை வழங்கிவிட்டு தானும் விபத்தில் சிக்கியது போல் அஞ்சு நாடகமாடி உள்ளார். ஆஷிஸின் உடலில் இருந்த காயங்கள், அஞ்சுவின் முன்னுக்குப் பின் முரணான வாக்குமூலம் உள்ளிட்டவற்றால் சந்தேகமடைந்த காவல் துறையினர், சிசிடிவி, செல்போன் டவர் உள்ளிட்டவற்றை ஆராய்ந்துள்ளனர்.
இதில், சஞ்சுவை கரம் பிடிக்க அஞ்சு தனக்கு தாலி கட்டிய கணவனையே கொலை செய்தது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக அஞ்சு உள்பட 4 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


