நெல்லை மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் இணை செயலாளர் வரதன் ஆகியோர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியையும் கிரிக்கெட் விளையாட்டையும் பிரபலப்படுத்த ரசிகர் பூங்காவை (பேன் பார்க்) நெல்லையில் அமைத்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. ரசிகர்களின் மிகப்பெரும் ஆதரவை பெற்றுள்ள ஐபிஎல் தொடரில் இதுவரை 16 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. மார்ச் 22ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் போட்டி நடந்தது. இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியை எதிர்கொண்டது.
இந்தாண்டின் ஐபிஎல்லில் இன்றும் (மே.11) , நாளையும் (மே.12) நடக்கும் மூன்று போட்டிகளை காண நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் இன்ஜினியரிங் கல்லூரியில் பேன் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 3000 பேர் போட்டியை காண வசதி செய்யப்பட்டுள்ளது. இதனை பார்ப்பதற்கு இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர். பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் திரளாக கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
