கோலாலம்பூர்:
கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஒரு போலீஸ்காரர் நேற்று அதிகாலை சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் உள்ள தனது குடியிருப்புக்கு பாதுகாப்பாக திரும்பியுள்ளார்.
சுபாங் ஜெயா போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மமட், 40 வயது நபர் அதிகாலை 1.45 மணிக்கு அந்த குடியிருப்புக்குள் நுழைந்ததை உறுதிப்படுத்தினார்.
ஜாலான் யுஎஸ்ஜே 8 இடத்திற்கு அவர் வந்தபோது பணியில் இருந்த ஊழியர்கள் அவரை வரவேற்றனர்.
தகவல் கிடைத்ததும், விசாரணை அதிகாரிகள் உடனடியாக அவரை யுஎஸ்ஜே 8 காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் அளித்தனர்.
வான் அஸ்லானின் அறிக்கையின்படி, அவர் பாதுகாப்பாக திரும்பி வந்ததைத் தெரிவிக்க அவரது மனைவியையும் அவர்கள் தொடர்பு கொண்டனர்.
காணாமல் போனதாக தேடப்பட்ட காலம் முழுவதும் மோரிப் மற்றும் புத்ரா ஹைட்ஸைச் சுற்றியுள்ள மசூதிகளுக்குச் சென்று, தொழுகை நடத்தியதாக அவர் அதிகாரிகளுக்குத் தெரிவித்தார் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த வியாழக்கிழமை இரவு சுமார் 9.15 மணியளவில் குறித்த போலீஸ்காரர் விடுதிரும்பாததால், அவரது குடும்பத்தினர் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.