செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஈப்போவைச் சேர்ந்த 62 வயது தினகரன் ரத்னம், RPGC Garden Hotel அறையில் இறந்து கிடந்தார்.
நேற்று மாலை 4.20 மணியளவில் அத்தகவல் கிடைத்ததாக, ஈப்போ போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஸைனால் அபிடின் அபாங் அமாட் கூறினார்.
கட்டிலில் படுத்தவாறு இறந்துகிடந்தவரின் உடலில் காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்றும் அவர் உயிரிழந்ததை சம்பவ இடத்திற்கு விரைந்த ராஜா பெர்மாய்சூரி துவாங்கு பைனுன் மருத்துவமனை மருத்துவக் குழு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
குற்றவியல் அம்சங்கள் எதுவும் கண்டறியப்படாததால், தற்போதைக்கு திடீர் மரணமாக அச்சம்பவம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சவப்பரிசோதனைக்காக சடலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.