Last Updated:
இஸ்ரேல் காசாவில் தாக்குதல் நடத்த 25 பேர் உயிரிழந்தனர். ஹமாஸ் அமைப்புடன் அமெரிக்கா அமைதி திட்டம் இருந்தும், ஜெய்டவுன் உள்ளிட்ட பகுதிகளில் உயிரிழப்பு அதிகரித்தது.
போர் நிறுத்தத்தை மீறி காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலுக்கும், காசாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக போர் நடந்தது வந்தது. இதில், சுமார் 70 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே இஸ்ரேல் – காசா இடையிலான போர் அமெரிக்காவின் 20 அம்ச அமைதி திட்டத்தின் கீழ் கடந்த மாதம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இருதரப்பிலும் பிணைக்கைதிகள் பரிமாற்றம் சுமூகமாக முடிந்து அமைதி திரும்பி வந்தது.
இந்நிலையில், நேற்று காசா முனையில் பல்வேறு பகுதிகளை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் திடீர் தாக்குதலில் இறங்கியது. ஜெய்டவுன் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கர்ப்பிணி, இளம்பெண் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.
இதேபோன்று காசா நகர் முழுவதும் நடத்தப்பட்ட தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். 77 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. ரஃபா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
November 20, 2025 8:35 AM IST


