• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

காசா போர் நிறுத்த ஒப்பந்தம்; 1,890 பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்கிறது இஸ்ரேல் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 19, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
காசா போர் நிறுத்த ஒப்பந்தம்; 1,890 பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்கிறது இஸ்ரேல் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கெய்ரோ,இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.

எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் தொடக்கத்தில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டது.

ஓராண்டை கடந்து காசாவில் நடந்து வரும் மோதலில் பாலஸ்தீனியர்களில் 46,900 பேர் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்து 10 ஆயிரத்து 700 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக எகிப்து, கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் ஏற்படுத்தும் பேச்சுவார்த்தைக்கான பணியில் ஈடுபட்டு வருகின்றன. போரை நிறுத்த ஏதுவாக நடந்து வரும் இதில் பலன் ஏற்பட்டு உள்ளது. இதன்படி, காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு இஸ்ரேல் மந்திரி சபை நேற்று ஒப்புதல் அளித்தது.

இதனால், பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டு உள்ள இஸ்ரேல் மக்கள் 94 பேரை பாதுகாப்பாக விடுவிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இவர்களில் 3-ல் ஒரு பகுதியினர் உயிரிழந்து இருக்க கூடும் என கூறப்படுகிறது.

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, முதல் கட்டத்தில் 1,890 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது என எகிப்து தெரிவித்து உள்ளது. காசா போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, பிடித்து வைத்துள்ள கைதிகளை பரஸ்பரம் விடுவிக்கும் நிகழ்வு நடைபெறும் என எகிப்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.

இந்த முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் 42 நாட்கள் நீடிக்கும். அது இந்திய நேரப்படி இன்று மதியத்தில் இருந்து தொடங்கும். இதன்படி, முதல் கட்டத்தில் 1,890 பாலஸ்தீனிய சிறை கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். இதற்கு ஈடாக, காசாவில் இருந்து, ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்துள்ள இஸ்ரேல் பணய கைதிகளில் 33 பேர் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



Read More

Previous Post

அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்பு | Donald Trump will be sworn in as the 47th President of the United States today

Next Post

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார் டொனால்ட் ட்ரம்ப்

Next Post
அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார் டொனால்ட் ட்ரம்ப்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin