அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது புதிய அமைதி வாரியம் (Board of Peace) மூலம் காசாவை மீண்டும் கட்டியெழுப்ப 5 பில்லியன் டொலர் நிதியுதவியை அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தலையீட்டுடன் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து மீறி வருகின்றன.
இந்தநிலையில், இன்று காசா முழுவதும் நடத்திய வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களில் இஸ்ரேலியப் படைகள் குறைந்தது 11 பலஸ்தீனர்களைக் கொன்றுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
போர்நிறுத்த ஒப்பந்தம்
வடக்குப் பகுதியில்ஜபாலியா அகதிகள் முகாமில் 5 பேரும், தெற்கு காசாவின் கான் யூனிஸ் பகுதியில் மேலும் 5 பேரும் இந்தத் தாக்குதலில் பலியாகியுள்ளனர்.

காசா நகரின் தல் அல்-ஹவா பகுதியில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், பலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் (PIJ) அமைப்பின் தளபதி சாமி அல்-தாதூ கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2025 அக்டோபர் 10 முதல் நடைமுறையில் உள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் இதுவரை இஸ்ரேல் 1,620 முறை விதிமீறல்களைச் செய்துள்ளதாகக் காசா அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஒப்பந்தம் நடைமுறை
இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பிறகு இதுவரை 601 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இப்படியான ஒரு பதற்றமான சூழலில், காசாவை மீண்டும் கட்டியெழுப்ப டிரம்ப் அறிவித்துள்ள 5 பில்லியன் டொலர் நிதியுதவித் திட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் இணைந்துள்ளன.
இருப்பினும், இஸ்ரேலின் இந்தத் தாக்குதல்களைப் புதிய இனப்படுகொலை என வர்ணித்துள்ள ஹமாஸ் அமைப்பு, சர்வதேச அமைப்புகளை இஸ்ரேல் அவமதித்து வருவதாகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
