• Login
Monday, May 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 1, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டெய்ர் அல்-பாலா,காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது.

அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், 101 இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியிருந்தது. அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், புத்தாண்டு நாளான இன்று காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 12 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, வடக்கு காசாவின் ஜபாலியா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் மற்றும் 4 குழந்தைகள் உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர். மத்திய காசாவில் உள்ள புரேஜ் அருகே உள்ள அகதிகள் முகாமில் நடந்த மற்றொரு தாக்குதலில் ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை கொல்லப்பட்டனர். அதேபோல, தெற்கு நகரமான கான் யூனிஸில் நடந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஆடவரின் மரணத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது



Read More

Previous Post

ஐசிசி பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 907 புள்ளிகளை குவித்து பும்ரா அசத்தல் | Bumrah scores 907 points in ICC bowlers rankings

Next Post

மாற்றம் காணும் சிறிலங்கா காவல்துறை: நகர்த்தப்படும் உயர்பீடங்கள்

Next Post
மாற்றம் காணும் சிறிலங்கா காவல்துறை: நகர்த்தப்படும் உயர்பீடங்கள்

மாற்றம் காணும் சிறிலங்கா காவல்துறை: நகர்த்தப்படும் உயர்பீடங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin